×

ஈழப்போர் முடிந்த பிறகு நடக்கும் கதை

சென்னை: திரைப்பட விழாக்களில் சிறந்த இயக்குனருக்கான விருது பெற்ற ‘மண்’ பட இயக்குனர் புதியவன் ராசையாவின் இயக்கத்தில் உருவாகியுள்ளது ‘ஒற்றைப் பனை மரம்’. ஈழத்தில் போர் முடிவுறும் இறுதிநாட்களில் ஆரம்பிக்கும் இக்கதை, சமகால சூழலில் சொல்லத் துணியாத கருவை தெள்ளத் தெளிவாக நகர்த்தும் கதையாக உருவாகியுள்ளது. உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் உருவாகியிருக்கும் இப்படத்திற்கு இசை அமைத்திருக்கிறார் அஷ்வமித்ரா.

தேசிய விருது பெற்ற சுரேஷ் அர்ஸ் படத்தொகுப்பையும், சர்வதேச விருது பெற்ற இலங்கை ஒளிப்பதிவாளர் மகிந்த அபேசிங்க ஒளிப்பதிவையும் மேற்கொண்டுள்ளனர். 40 சர்வதேச திரைப்பட விழாக்களில் தேர்வாகி, சிறந்த நடிகர், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த இசை என 17 விருதுகளையும் இப்படம் குவித்திருக்கிறது. புதியவன் ராசையா, நவயுகா, அஜாதிகா புதியவன், மாணிக்கம் ஜெகன், தனுவன் நடித்துள்ளனர். ஆர்எஸ்எஸ்எஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ். தணிகைவேல் தயாரித்த இப்படம் தமிழகம் முழுவதும் அக்டோபர் 25ம் தேதி வெளியாகிறது.

The post ஈழப்போர் முடிந்த பிறகு நடக்கும் கதை appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Eelam War ,Chennai ,Mann ,Eelam ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED இயற்கை முறையில் பயிர்சாகுபடி;...