×

தனுஷுடன் மீண்டும் பணியாற்றுவது ஏன்? நித்யா மேனன்

சென்னை: தேசிய விருது பெற்ற ‘திருச்சிற்றம்பலம்’ படத்தின் மூலம் தனுஷ், நித்யா மேனன் இருவரும் நல்ல நண்பர்களாகி விட்டனர். தற்போது தனுஷ் இயக்கி நடிக்கும் ‘இட்லி கடை’ படத்திலும் நித்யா மேனன் நடிக்கிறார். இந்நிலையில் அவர் அளித்துள்ள பேட்டி: ஆக்கப்பூர்வமாகவும், தொழில்ரீதியாகவும் ஒரு படத்துக்கோ அல்லது கேரக்டருக்கோ என்னால் என்ன செய்ய முடியும் என்பதை தனுஷ் மதிக்கிறார்.

சில கதைகளுடன் வந்து, ‘இதுபற்றி என்ன நினைக்கிறீர்கள்?’ என்று என்னிடம் கேட்கிறார். பிறகு கதைகளை மேம்படுத்துகிறார். எதைச் செய்தாலும் அர்ப்பணிப்புடன் செய்யக்கூடிய மனிதர். அதை நான் பெரிதும் பாராட்டுகிறேன். அதனால்தான் அவருக்கு என்னால் முடிந்தவரைக்கும் உதவி செய்யவும், அவரது படங்களில் பணியாற்றவும் முயற்சிக்கிறேன். இதுபோல் ஒருவரை ஒருவர் மதிக்கக்கூடிய, பாராட்டக்கூடிய, சேர்ந்து பணியாற்றக்கூடிய நபர்களைப் பார்ப்பது மிகவும் அபூர்வம்.

The post தனுஷுடன் மீண்டும் பணியாற்றுவது ஏன்? நித்யா மேனன் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Taurus ,Nitya Menon ,Chennai ,Dhanush ,Nithya Menon ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED 37 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்த கரகாட்டக்காரன் ஜோடி