×

லண்டனில் கால்பந்து போட்டியை ரசித்த அஜித்

லண்டன்: குட் பேட் அக்லி’ படத்தின் படப்பிடிப்புக்காக ஸ்பெயின் நாட்டுக்குச் சென்ற அஜித், தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வந்தார். அவை இணையத்தில் வைரலானது. இந்த நிலையில், லண்டனில் நடந்த ஒரு கால்பந்து போட்டியை நேரடியாக பார்க்கச் சென்று அஜித் மைதானத்தில் இருந்து எடுத்த செல்பி வீடியோவை வெளியிட்டுள்ளார். ஸ்பெயின் படப்பிடிப்புக்கு இடையே கிடைத்த 2 நாள் ஓய்வில் அவர் அங்கிருந்து லண்டன் சென்றிருப்பதாக கூறப்படுகிறது. ஸ்டேடியத்தில் அமர்ந்தபடி அவர் கால்பந்து ஆட்டத்தை ரசிக்கிறார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அஜித் ரசிகர்கள் இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

The post லண்டனில் கால்பந்து போட்டியை ரசித்த அஜித் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Ajit ,London ,Spain ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED சரியான நபர்களை தேர்தெடுத்து...