×

நிர்மலா சீதாராமன் உட்பட 27 எம்பிக்கள் பதவியேற்பு

புதுடெல்லி: மாநிலங்களவைக்கு புதிதாக தேர்வு செய்யப்பட்ட ஒன்றிய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், பியூஷ் கோயல் உட்பட 27 எம்பி.க்கள் நேற்று பதவியேற்றனர். சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்தலில் 57 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களில் 27 எம்பி.க்கள் நேற்று பதவியேற்றனர். மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு முன்னிலையில் இவர்களின் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. 10 மாநிலங்களை சேர்ந்த 27 எம்பி.க்கள் 9 மொழிகளில் பதவி பிரமாணம் செய்தனர். 12 எம்பி.க்கள் இந்தியிலும், ஆங்கிலத்தில் 4 பேரும், சமஸ்கிருதம், கன்னடா, மராத்தி மற்றும் ஒடியா மொழியில் தலா இரண்டு பேரும் பதவியேற்றனர். பஞ்சாபி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் தலா ஒரு எம்பி  பதவி பிரமாணம் ஏற்றனர். புதிதாக தேர்வான 57 பேரில் ஏற்கனவே 4 பேர் பதவியேற்றுக் கொண்டனர்….

The post நிர்மலா சீதாராமன் உட்பட 27 எம்பிக்கள் பதவியேற்பு appeared first on Dinakaran.

Tags : Elirmala Sitharaman ,New Delhi ,Union Ministers ,Nirmala Sitharaman ,Piyush Goel ,Elise Sitharaman ,
× RELATED ஜாதி, மத அடிப்படையில் கைதிகளை பிரிக்க...