×

சாஸ்த்ரா நிகர்நிலை பல்கலைக்கழகம் தமிழ்நாடு அரசின் டைசல் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

சென்னை: சாஸ்த்ரா நிகர்நிலைப்பல்கலைக்கழகம் தமிழ்நாடு அரசின் டைசல் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. தஞ்சாவூர் சாஸ்த்ரா நிகர்நிலை பல்கலைக்கழகம், தமிழ்நாடு அரசின் டைசல் நிறுவனத்துடன் நோய் கண்டறிதல் மற்றும் சிகிச்சை தொடர்பான ஆராய்ச்சி மற்றும் தொழில் முனைவோர் திறன் மேம்பாட்டுக்கென ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. சாஸ்த்ராவின் பயோ இன்குபேட்டர் மையம், தமிழ்நாடு அரசின் உயரி தொழில் நுட்ப கல்வி ஆராய்ச்சி மற்றும் மாணவர்களின் கல்வித்திறன் மேம்படுத்தும் முயற்சியில் முக்கிய பங்காற்றி இத்திட்டத்தின் வெற்றிக்கு வழிவகுக்கும் வகையில் செயல்படும்.சாஸ்த்ராவின் அப்ளஸ்ட் எனப்படும் பயோ இன்குபேட்டர் மையம் டைசல் நிறுவனத்துடன் செய்து கொண்டுள்ள இந்த ஒப்பந்தம் 6.07.2022 அன்று தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் தலைமைச் செயலகத்தில் கையெழுத்தானது. சாஸ்த்ரா அப்ளஸ்ட் மையத்தில் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் எஸ்.அனுராதா, சாஸ்த்ரா சார்பாக இந்த ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டார். சாஸ்த்ராவின் அப்ளஸ்ட்  மையம் பிராக் எனப்படும் மத்திய அரசின் பயோடெக்னாலஜி துறையின் கீழ் இயங்கும் அமைப்பின் ஆதரவுடன் செயல்படுகிறது. இம்மையம் சிகிச்சை, நோயறிதல், செயற்கை நுண்ணறிவு, இயந்திர கற்றல் போன்ற துறைகளில் ஸ்டாட்- அப் நிறுவனங்கள் தொடங்க உதவி புரிகிறது….

The post சாஸ்த்ரா நிகர்நிலை பல்கலைக்கழகம் தமிழ்நாடு அரசின் டைசல் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் appeared first on Dinakaran.

Tags : Shastra Online University ,Diesel Company ,Government of Tamil Nadu ,Chennai ,Shastra University ,Tamil Nadu Government Diesel Company ,Thanjavur ,Tamil Nadu… ,Sastra Online University ,
× RELATED அரசியல் சட்டப்படி அனைத்துக்...