×

கருப்பாநதி அணையில் தண்ணீர் வற்றியதால் செத்து மிதந்த மீன்கள் அகற்றம்

கடையநல்லூர்: கடையநல்லூர் கருப்பாநதி அணையில் தண்ணீர் வற்றியதால் செத்து மிதந்த மீன்களை அகற்றினர்.கடையநல்லூர் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் 72 அடி கொள்ளவு கொண்ட கருப்பாநதி அணைக்கட்டு உள்ளது. இந்த அணையில் ஆண்டுதோறும் மீன்வளத்துறை சார்பில் குத்தகைக்கு விடப்பட்டு மீன் பாசி வியாபாரிகள் குஞ்சுகள் விடுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் கட்லா, கண்ணாடி கட்லா கென்டை, பன்னா, கெளுத்தி, தேழி போன்ற மீன் குஞ்சுகளை வளர்த்து வந்தனர்.  ஆனால் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை சரிவர பெய்யாததால் தண்ணீர் இல்லாமல் குறைந்து காணப்பட்டு அணையும் வற்றியது. இதனால் மீன்கள் அனைத்தும் செத்து மிதப்பதால் துர்நாற்றம் வீசியது. இதுகுறித்து கடந்த 4ம்தேதி தினகரன் நாளிதழில் செய்தி வெளியானது.இதனையடுத்து செத்து மிதக்கும் மீன்களை அப்புறப்படுத்த வேண்டுமென பொதுப்பணித்துறை அதிகாரிகள், ஏலம் எடுத்த குத்தகைதாரருக்கு உத்தரவிட்டனர். இதை தொடர்ந்து நேற்று அணையில் செத்து மிதந்த ரூ.4 லட்சம் மதிப்பிலான இரண்டு டன் மீன்களை ராட்சத விஞ்ச் மூலம் பணியாளர்கள் அகற்றினர்….

The post கருப்பாநதி அணையில் தண்ணீர் வற்றியதால் செத்து மிதந்த மீன்கள் அகற்றம் appeared first on Dinakaran.

Tags : Karupanadi Dam ,Kadayanallur ,Kadayanallur Karuppanadi dam ,Ghats ,
× RELATED கோயில் திருவிழாவில் தாக்குதலில்...