×

மணப்பாக்கம் பகுதியில் பாதுகாப்பற்ற முறையில் பாதாளசாக்கடை பணி: விபத்து பீதியில் பொதுமக்கள்

சென்னை: மணப்பாக்கம் பகுதியில் பாதுகாப்பற்ற முறையில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் நடைபெறுவதால், பொதுமக்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. சென்னை ஆலந்தூர் அருகே மணப்பாக்கம் பகுதியில் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில், மாநகராட்சி சார்பில் ₹25 கோடி மதிப்பீட்டில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் கடந்த 2 ஆண்டாக நடைபெற்று வருகிறது. இதற்காக, தெருக்களில் பைப்லைன் பதிக்கப்பட்டு, முக்கிய பகுதிகளில் மேன்ஹோல்கள் அமைக்கப்பட்டு வருவது.ஆனால், பெரும்பாலான இடங்களில் மேன்ஹோல் அமைக்கப்படும் பகுதியை சுற்றி தடுப்புகள் அமைக்காமல் திறந்த நிலையில் பணிகள் நடைபெறுவதால், அதில் பொதுமக்கள் மற்றும் சிறுவர்கள் தவறி விழும் அபாயம் உள்ளது. மேன்ஹோல் அமைக்க சுமார் 15 அடி ஆழத்தில் தோண்டப்பட்டுள்ள பள்ளத்தில், கம்பிகள் ஆபத்தான முறையில் உள்ளதால், யாரேனும் தவறி விழுந்தால் உயிரிழக்கும் நிலை உள்ளது. குறிப்பாக, இரவில் பணி முடிந்து வீடு திரும்புவோர், இந்த மேன்ஹால் பள்ளங்களால் பாதுகாப்பற்ற முறையில் செல்கின்றனர். எனவே, இந்த பணி நடைபெறும் இடத்தில் தடுப்பு வைக்கவும், பணிகளை விரைந்து முடிக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்ற கோரிக்கை எழுந்துள்ளது.இதுபற்றி அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘பாதாள சாக்கடை திட்ட பணி 2 ஆண்டாக மந்தகதியில் நடைபெற்று வருகிறது. தற்போது, மேன்ஹோல் அமைக்கும் பணிகள் பாதுகாப்பற்ற முறையில் நடைபெறுவதால், பொதுமக்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே, பாதாள சாக்கடை பணிகளை பாதுகாப்பான முறையில் மேற்கொள்ள வேண்டும். மேலும், பாதாள சாக்கடை பணி முடிந்த மணப்பாக்கம் பிரதான சாலை, கிரிகோரி தெரு, அம்பேத்கர் தெரு, பெரிய தெரு, மேட்டுத்தெரு போன்ற பகுதிகளில் பள்ளங்கள் சரிவர மூடப்படாமல் குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதை சீரமைத்து, புதிய சாலை அமைத்து தர வேண்டும்,’’ என்றனர். …

The post மணப்பாக்கம் பகுதியில் பாதுகாப்பற்ற முறையில் பாதாளசாக்கடை பணி: விபத்து பீதியில் பொதுமக்கள் appeared first on Dinakaran.

Tags : Manapakkam ,CHENNAI ,Dinakaran ,
× RELATED கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த பாஜ நிர்வாகி: குண்டர் சட்டத்தில் கைது