- பாஜக
- பண்ருட்டி
- ராஜேந்திரன்
- சேலம் மெயின் ரோடு, மணப்பாக்கம்
- கடலூர் மாவட்டம்
- கமல்ராஜ் மாமூல்
- பண்ருட்டி ஒன்றிய பா.ஜ.க
- தின மலர்
பண்ருட்டி: கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த மணப்பாக்கம், சேலம் மெயின் ரோட்டில் பெட்டிக்கடை வைத்திருப்பவர் ராஜேந்திரன் (62). சம்பவத்தன்று இவரது கடைக்கு வந்த பண்ருட்டி ஒன்றிய பாஜ செயலாளரான ஆட்டோ டிரைவர் கமல்ராஜ் மாமூல் கேட்டு கத்தியை காட்டி மிரட்டியுள்ளார். ராஜேந்திரன் தர மறுத்ததால் அவரது கழுத்தில் கத்தியை வைத்து சட்டை பையில் இருந்த ரூ.2 ஆயிரத்தை எடுத்துக் கொண்டார்.
அங்கிருந்தவர்களிடம் கத்தியை காட்டி யாராவது அருகே வந்தால் குத்தி கொலை செய்துவிடுவேன் என மிரட்டல் விட்டுள்ளார். இதுகுறித்து புதுப்பேட்டை போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிந்து கமல்ராஜை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பல்வேறு புகார்கள் இருந்ததால் கமல்ராஜை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க எஸ்பி ராஜாராம் பரிந்துரையின்படி கலெக்டர் அருண் தம்புராஜ் உத்தரவிட்டார். அந்த உத்தரவு கடலூர் மத்திய சிறையில் நேற்று வழங்கப்பட்டது.
The post கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த பாஜ நிர்வாகி: குண்டர் சட்டத்தில் கைது appeared first on Dinakaran.