- அமைச்சர்
- செகராபாபு
- நெல்லையப்பர் காந்திமதி அம்மன் திருக்கோயில்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- முதல் அமைச்சர்
- ஜி.கே.
- ஸ்டாலின்
- திருநெல்வேலி வானம்பேட்டை
- செல்வியம்மன் திருக்கோயிலில்
- அருள்மிகு
நெல்லை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி இன்று (05.07.2022) திருநெல்வேலி வண்ணாரப்பேட்டை பேராத்து செல்வியம்மன் திருக்கோயில், அருள்மிகு நெல்லையப்பர் அருள்தரும் காந்திமதி அம்மன் திருக்கோயில், திருக்குறுங்குடி அருள்மிகு அழகிய நம்பிராயர் திருக்கோயில் ஆகிய திருக்கோயில்களில் மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது அமைச்சர் அவர்கள் தெரிவித்தாவது, பேராத்து செல்வியம்மன் திருக்கோயிலில் நாளை கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு இன்று யாகசாலை பூஜைகளை தொடங்கி வைக்கப்பட்டது. தொடர்ந்து அருள்மிகு நெல்லையப்பர் அருள்தரும் காந்திமதி அம்மன் திருக்கோயிலில் தேரோட்ட முன்னேற்பாடு பணிகள் குறித்தும், மூலிகை தைலம் தயாரிக்கும் பணிகள் 25 நாட்களாக நடைபெற்று வருகின்றன. முன்பு ஆய்விற்கு வந்தபோது தலமரத்தை சுற்றி சிமெண்ட் மேடை அமைக்கப்பட்டிருந்தது. அதை அகற்றி கல்லால் ஆன மேடை அமைக்கப்பட்டதை பார்வையிட்டோம். தொன்மையான 1000 ஆண்டுகள் முற்பட்ட திருக்கோயில்கள் ஆதிதிராவிடர் பகுதி மற்றும் கிராமப்புறங்களில் உள்ள திருக்கோயில்கள் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திருப்பணிகளுக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட அனைத்து திருக்கோயில்களிலும் ஆகம விதிப்படி பழமை மாறாமல் புதுப்பிக்க அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டு திருப்பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. கல் மண்டபம், அம்மன் சன்னதி மேற்கூரையில் தட்டோடு பதித்தல், தெப்பக்குளம் சீரமைத்தல், 1000 கால் மண்டபம் வாசல் புனரமைத்தல் மற்றும் TVS நிறுவனத்தின் மூலம் ரூ.4.14 கோடி மதிப்பீட்டில் நடைபெறவுள்ள பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டோம். அடிப்படை வசதிகள் மற்றும் மேம்பாட்டு பணிகளும் விரைவில் தொடங்கப்படவுள்ளது. தேர் உலா வருகின்ற வீதிகளை சீர்செய்ய உத்தரவிட்டுளோம். திருக்கோயிலுக்கு விரைவில் உதவி ஆணையர் நிலையில் அலுவலர் பணியமர்த்தப்படுவார்கள். திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோயிலில் தற்போது வழங்கப்பட்டு வரும் அன்னதானத் திட்டத்தினை விரிவுபடுத்தி முக்கிய திருவிழா நாட்களில் நாள் ஒன்றுக்கு 500 நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்று பாராமல் இத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரின் கோரிக்கையை ஏற்று அன்னதான திட்டம் தற்போது தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதனால் வருடத்திற்கு 60,000 நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும். ஆண்டொன்றுக்கு ரூ. 21 லட்சம் திருக்கோயில் நிதியிலிருந்து செலவிடப்படும். விரிவாக்கப்பட்ட அன்னதான திட்டத்தினை திட்டத்தை தொடக்கி வைத்தோம். ரூ. 9 கோடி செலவில் 16 திருக்கோயில்களில் புதியதாக திருத்தேர் செய்யும் பணி நடைபெற்று வருகின்றது. திமுக ஆட்சி தொடங்கப்பட்டு 200 க்கும் மேற்பட்ட திருக்கோயில்களில் குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் திருவட்டாறு அருள்மிகு ஆதிகேசவப் பெருமாள் திருக்கோயிலில் நீண்ட வருடங்களுக்கு பிறகு தற்போது குடமுழுக்கு நடைபெறவுள்ளது. …
The post நெல்லையப்பர் காந்திமதி அம்மன் திருக்கோயிலில் விரிவுப்படுத்தப்பட்ட அன்னதானத் திட்டத்தை அமைச்சர் சேகர்பாபு தொடக்கி வைத்தார்!! appeared first on Dinakaran.