×

பாடாலூரில் இருந்து பூ மலைக்கு பால்குடம் எடுத்து பக்தர்கள் சிறப்பு வழிபாடு

பாடாலூர்:  ​பாடாலூர் வேதநாரயண பெருமாள் கோயிலில் இருந்து பால் குடம் எடுத்துகொண்டு பக்தர்கள் பாடாலூரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று பூமலை சஞ்சீவிராயர் மலை அடிவாரம் வந்தவுடன் அங்கு கோ பூஜை நடத்தப்பட்டு, ஒவ்வொரு படிகளுக்கும் சிறப்பு பூஜை செய்து வழிபாடு நடத்தினர். பின்னர், பால்குடத்தை எடுத்துச் சென்று மலை மேல் உள்ள சஞ்சீவிராயருக்கு செலுத்தி சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் செய்து வழிபாடு நடத்தினர்.

இந்த சிறப்பு அபிஷேகத்தில் இரூர், பாடாலூர், திருவிளக்குறிச்சி, காரை, தெரணி, விஜயகோபாலபுரம், நாரணமங்கலம், ஆலத்தூர்கேட், மருதடி, சீதேவிமங்கலம் உள்ளிட்ட சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பு வழிபாடுகள் நடத்தினர். அதனையடுத்து மலையின் அடிவாரத்தில் உள்ள வழிதுணை ஆஞ்சநேயருக்கு வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர், மலை அடிவாரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags : Pilgrims ,flower hill ,Patalur ,
× RELATED நாகூர் தர்காவில் 467வது கந்தூரி விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்