×

பெண் தெய்வம் குறித்த சர்ச்சை: லீனா மீது உ.பி போலீஸ் வழக்கு

லக்னோ: பெண் தெய்வம் குறித்த ‘காளி’ ஆவணப் படத்தின் போஸ்டரை கனடாவில் இருந்து தமிழகத்தை சேர்ந்த பெண் இயக்குனர் லீனா மணிமேகலை என்பவர் சமீபத்தில் வெளியிட்டார். இந்த போஸ்டர் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், லீனா மணிமேகலைக்கு எதிராக நேற்று ெடல்லி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அதனை தொடர்ந்து இன்று உத்தரபிரதேச போலீசாரும் வழக்குபதிந்துள்ளனர். இதுகுறித்து போலீஸ் அதிகாரி கூறுகையில், ‘ஹஸ்ரத்கஞ்ச் காவல் நிலையத்தில் லீனா மணிமேகலைக்கு எதிராக வழக்குபதியப்பட்டுள்ளது. அவர் மீது இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) பிரிவுகள், 120-பி, 153-பி, 295, 295-ஏ, 298, 504, 505(1)(பி), 505(2), 66 மற்றும் 67 ஆகியவற்றின் கீழ் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது’ என்றார். …

The post பெண் தெய்வம் குறித்த சர்ச்சை: லீனா மீது உ.பி போலீஸ் வழக்கு appeared first on Dinakaran.

Tags : Leena Lucknow ,Tamil Nadu ,Canada ,Leena ,
× RELATED இந்தியா, ஓமன் இடையே ஒருங்கிணைந்த பொருளாதார கூட்டு ஒப்பந்தம் கையெழுத்து!!