×

கொடநாடு காட்சி முனையில் கடும் மேகமூட்டம்: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

கோத்தகிரி: கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான கொடநாடு, கீழ் கோத்தகிரி, கெரடாமட்டம் உள்ளிட்ட இடங்களில் கடந்த வாரம் முதலே தென் மேற்கு பருவமழை பெய்ய தொடங்கியுள்ளது. இதனால் பகல் நேரங்களில் காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு சாலைகள், தேயிலை தோட்டங்கள், காட்சி முனைகளில் மேகம் சூழ்ந்து காணப்பட்டது. சாலைகளில் வாகனங்கள் இயக்க முடியமால் வாகன ஓட்டிகள்  சிரமத்திற்குள்ளாகினர். மேலும் பகல் நேரங்களில் அதிக குளிர் நிலவியதோடு, காட்சி முனைகளில் மேகம் சூழ்ந்து காணப்பட்டது. வார விடுமுறையான நேற்று கொடநாடு காட்சி முனைக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். அப்போது  கடும் மேகம் சூழ்ந்து மோசமான காலநிலை நிலவியதால் காட்சி முனையை கண்டு ரசிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர். …

The post கொடநாடு காட்சி முனையில் கடும் மேகமூட்டம்: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் appeared first on Dinakaran.

Tags : Koda Nadu ,Kothagiri ,Kodanadu ,Lower Kodagiri ,Keradamattam ,Dinakaran ,
× RELATED சசிகலாவுக்கு சொந்தமான கோடநாடு...