×

திருமயம் அருகே மாட்டு வண்டி எல்கை பந்தயம்; திரளான மக்கள் ரசித்தனர்

திருமயம்: திருமயம் அருகே கோயில் சந்தன காப்பு திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற மாட்டு வண்டி எல்கை பந்தயத்தில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளருக்கு ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள ஊனையூர் பாலமுருகன் கோயில் சந்தன காப்பு திருவிழாவை முன்னிட்டு நேற்று காலை 6 மணி அளவில் 30ம் ஆண்டு மாட்டுவண்டி எல்லை பந்தயம் நடத்தப்பட்டது. இதில் புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, தேனி, தஞ்சை, திருச்சி, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து மாட்டுவண்டிகள் பங்கு பெற்றன. பந்தயமானது பெரிய மாடு, சிறிய மாடு என இரண்டு பிரிவாக நடத்தப்பட்டது. முதலில் நடைபெற்ற பெரிய மாடு பிரிவில் பந்தய தொலைவு போய் வர 8 மைல் தூரமாக நிர்ணயிக்கப்பட்ட நிலையில் 10 ஜோடி மாடுகள் கலந்து கொண்டன. இதில் முதல் பரிசு மாத்தூர் சேரன் செங்குட்டுவன், 2ம் பரிசு கள்ளந்திரி சிவபிரபு, 3ம் பரிசு கானாடுகாத்தான் சோலை ஆண்டவர், 4ம் பரிசு காணாடுகாத்தான் அருண் ஆகியோருக்கு சொந்தமான மாடுகள் வென்றன. இதனை தொடர்ந்து நடைபெற்ற சிறிய மாடு பிரிவு 19 ஜோடி மாடுகள் கலந்து கொண்டன. இதன் பந்தயத் தொலைவு போய் வர 6 மைல் தூரமாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதில் முதல் பரிசு வெளிமுத்தி வாகினி, 2ம் பரிசு வெள்ளலூர் நிரஞ்சன், 3ம் பரிசு சூரக்குண்டு அமர்நாத், 4ம் பரிசு அப்பன்திருப்பதி கிட்டு ஆகியோருக்கு சொந்தமான மாடுகள் வென்றன. இறுதியில் பந்தயத்தில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளருக்கு ரொக்க பரிசு வழங்கப்பட்டது. பந்தயம் நடைபெற்ற காரைக்குடி-திருச்சி பைபாஸ் சாலையில் இருபுறமும் திரளான ரசிகர்கள் வந்திருந்து பந்தயத்தை கண்டு ரசித்தனர். திருமயம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்….

The post திருமயம் அருகே மாட்டு வண்டி எல்கை பந்தயம்; திரளான மக்கள் ரசித்தனர் appeared first on Dinakaran.

Tags : Cow's Cart ,Elgai ,Tirumiam ,Tirumayam ,Cow Cart Elk Races ,Temple Sandalwood Bracelet Festival ,Thirumayam ,Cow ,Cart Elk ,Trismam ,
× RELATED அரிமளம் அருகே குதிரை, மாட்டு வண்டி எல்கை பந்தயம்