×

என்னை காதலித்தவர்கள் ஓடிப்போனது ஏன்? சுஷ்மிதா சென் பதில்

மும்பை: தனது வாழ்க்கையில் முழு அங்கமாக இடம்பெற ஆண்கள் விரும்புவதில்லை என நடிகை சுஷ்மிதா சென் கூறினார். நிகழ்ச்சி ஒன்றில் நடிகை டிவிங்கிள் கன்னாவுடன் சுஷ்மிதா சென் உரையாடினார். அப்போது திருமணம் பற்றி சுஷ்மிதா கூறியது: எனக்கு 47 வயதாகிறது. மகள்கள் ரெனி, அலிஷா (வளர்ப்பு மகள்கள்) உடன் சந்தோஷமாக இருக்கிறேன். எனது வாழ்க்கையில் பல ஆண்களை சந்தித்திருக்கிறேன். அவர்களில் சிலரை காதலித்து இருக்கிறேன். அவர்களும் என்னை காதலித்துள்ளனர். ரெனியும் அலிஷாவும் என்னிடம் வந்த பிறகு, ஆண்கள் பலரும் என்னை விட்டு தூரம் செல்லவே விரும்பினார்கள். புதிய பொறுப்பு அவர்களுக்கு பிடிக்கவில்லை. அதாவது, எனக்கு காதலனாகவும் இருக்க வேண்டும், இரண்டு பெண் குழந்தைகளுக்கு அப்பாவாகவும் இருக்க வேண்டும் என்ற பொறுப்பை பற்றித்தான் சொல்கிறேன். அதனால் என்னை மட்டும் ஏற்றுக்கொண்டவர்கள், எனது சிறிய குடும்பத்தை ஏற்க தயாராக இல்லை. இதுதான் எனது திருமணங்கள் தடைபட்டதற்கான காரணம். அத்துடன் மோதிரம் மாற்றி என்னுடன் நிச்சயம் செய்து கொண்ட காதலர்கள் சிலர், தாங்கள் ஏமாற்றப்பட்டதாக நினைத்தார்கள். அதனால் என்னை விட்டு விலகிவிட்டார்கள். பட வாய்ப்புகள் இல்லாத இந்த சமயத்திலும் எனக்கு வெப்சீரிஸ் வாய்ப்பு வருகிறது. அதில் நடித்து எனது குடும்பத்துக்கான தேவைகளை பூர்த்தி செய்துகொள்கிறேன். அதே சமயம், யாரிடமும் வாய்ப்பு கேட்டு போய் நிற்பதில்லை. தியேட்டர்களில் ஆங்கில நாடகங்களிலும் நடித்து வருகிறேன். இவ்வாறு சுஷ்மிதா சென் கூறினார்….

The post என்னை காதலித்தவர்கள் ஓடிப்போனது ஏன்? சுஷ்மிதா சென் பதில் appeared first on Dinakaran.

Tags : Sushmita Sen. ,Mumbai ,Sushmita Sen ,
× RELATED மும்பை விமான நிலையத்தில் ரூ9.75 கோடி போதைப்பொருள் பறிமுதல்