×

சிறப்பாக செயல்படும் அரசு பள்ளிகள்: ஐஸ்வர்யா ராஜேஷ் பாராட்டு

சென்னை: சென்னையில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கூறியது: நகரத்தில் வாழும் பலரும் தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளியில் சேர்க்க யோசிப்பார்கள். ஆனால், அரசுப் பள்ளிகளில் சமீபகாலமாக புதுப்புது திட்டங்கள் கொண்டு வரப்படுகின்றன. காலை உணவுத் திட்டம் தொடங்கி நல்ல கல்வி கொடுப்பது என பல வசதிகள் கொண்டு வரப்பட்டுள்ளன.

இதன் மூலம் அரசுப் பள்ளிகள் சிறப்பாக செயல்படுகின்றன. ஹேமா கமிட்டி விவகாரம் போல் தமிழ் திரையுலகில் இதுவரை அப்படி எதுவும் நடக்கவில்லை. கண்டிப்பாக அப்படி எதுவும் இருக்காது என நான் நம்புகிறேன். அப்படி நடந்தால் பூதாகரமாக வெடித்திருக்கும். நான் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தியில் படம் நடித்துள்ளேன். நான் இதுவரை அப்படியொரு பிரச்னையை எதிர்கொண்டதில்லை.

The post சிறப்பாக செயல்படும் அரசு பள்ளிகள்: ஐஸ்வர்யா ராஜேஷ் பாராட்டு appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Aishwarya Rajesh ,Chennai ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED காஸ்ட்டிங் ஏஜென்ட் கமல்ஹாசன் எச்சரிக்கை