×

மகளுக்கு பாலியல் தொல்லை கொடூர தந்தை அதிரடி கைது: உடந்தை தாயும் சிக்கினார்

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்த அப்பூர்பாளையம் பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளியின் 18 வயது மகள், 10ம் வகுப்பு வரை படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார். கடந்த சில நாட்களாக, சிறுமியின் தந்தை மதுபோதையில் வந்து, பெற்ற மகள் என்றும் பாராமல் பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி, இதுகுறித்து தனது தாயிடம் தெரிவித்துள்ளார். ஆனால் அவர் கண்டுகொள்ளவில்லை.இந்நிலையில் நேற்றும், அந்த சிறுமிக்கு அவரது தந்தை பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் விரக்தியடைந்த சிறுமி, இதுகுறித்து திருச்செங்கோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து சிறுமியின் பெற்றோரை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில், மகளுக்கு அவரது தந்தை பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவரை கைது செய்த போலீசார், இந்த கொடுமைக்கு உடந்தையாக இருந்த தாயையும் கைது செய்தனர். தொடர்ந்து இருவரையும் திருச்செங்கோடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர்களை 15 நாள் காவலில் வைக்கும்படி நீதிபதி சுரேஷ்பாபு உத்தரவிட்டார். அதன் பேரில், இருவரையும் போலீசார் சிறையில் அடைத்தனர். …

The post மகளுக்கு பாலியல் தொல்லை கொடூர தந்தை அதிரடி கைது: உடந்தை தாயும் சிக்கினார் appeared first on Dinakaran.

Tags : Namakkal ,Namakkal district ,Tiruchengod ,Apurpurbalayam ,
× RELATED மின்சார ஊழியருக்கு வலிப்பு: நாமக்கல் வாக்கு எண்ணும் மையத்தில் பரபரப்பு