×

பிணிநீக்கி நம் உயிர்காக்கும் மருத்துவர்களைப் போற்றிடுவோம் :முதல்வர் மு.க.ஸ்டாலின், ஓபிஎஸ் தேசிய மருத்துவர்கள் தின வாழ்த்து!!

சென்னை : ஒவ்வொரு ஆண்டும், ஜூலை 1ம் தேதி இந்திய மருத்துவ சங்கம் (ஐ.எம்.ஏ) சார்பில் ‘தேசிய மருத்துவர்கள் தினம்’ கொண்டாடுகிறது. வங்காள முன்னாள் முதலமைச்சர் டாக்டர் பிதன் சந்திர ராயின் பிறப்பு மற்றும் நினைவு தினத்தை நினைவுகூறும் வகையில் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது. தங்கள் உயிரைப் பணயம் வைத்து மக்களுக்கு சேவை செய்து வரும் அனைத்து மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கும் இந்த நாள் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில் தேசிய மருத்துவர்கள் தினத்தையொட்டி முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ஏழை மக்களுக்கு அன்புள்ளத்தோடு சிகிச்சை அளித்ததோடு, விடுதலைப் போராட்டத்திலும் பங்கெடுத்து, பின்னாளில் மேற்கு வங்க முதலமைச்சராக உயர்ந்த மருத்துவர் பி.சி.ராய் அவர்களின் பிறந்தநாளான இன்று தேசிய #DoctorsDay பிணிநீக்கி நம் உயிர்காக்கும் மருத்துவர்களைப் போற்றிடுவோம்!’ என்று குறிப்பிட்டுள்ளார்.அதேபோல் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், உயிர்காக்கும் உன்னதமான மருத்துவ தொழிலை, தொழிலாகக் கருதாமல் தொண்டாகக் கருதி சேவை மனப்பான்மையுடனும், அர்ப்பணிப்பு உணர்வுடனும் பணியாற்றும் மருத்துவர்களுக்கு தேசிய மருத்துவ தினமான இந்நாளில் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்று ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். …

The post பிணிநீக்கி நம் உயிர்காக்கும் மருத்துவர்களைப் போற்றிடுவோம் :முதல்வர் மு.க.ஸ்டாலின், ஓபிஎஸ் தேசிய மருத்துவர்கள் தின வாழ்த்து!! appeared first on Dinakaran.

Tags : Stapless ,CM BC ,G.K. Stalin ,OPS National Doctors Day ,Chennai ,Medical Association of India ,ITS ,MM ,National Doctors Day ,Stapler ,CM BC. G.K. Stalin ,Dinakaran ,
× RELATED சாதனை படைத்து தமிழ்நாட்டுக்கு பெருமை...