×

கூத்தாடி அம்மன் பால்குட விழா

சிங்கம்புணரி: கூத்தாடி அம்மன் கோயில் பால்குட விழா நேற்று நடைபெற்றது. சிங்கம்புணரி கூத்தாடி அம்மன் கோயில் பங்குனி திருவிழா கடந்த 19ம் தேதி காப்பு கட்டி தொடங்கியது. இதை தொடர்ந்து நேற்று காலை பால்குட விழா மற்றும் கரும்பு தொட்டில் எடுக்கும் விழா நடைபெற்றது. கூத்தாடி அம்மன் கோயில் தெருவிலிருந்து ஏராளமான பக்தர்கள் பால்குடங்களை சுமந்து முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து கோயிலை வந்தடைந்தனர். அங்கு அம்மனுக்கு பாலபிசேகம் செய்யப்பட்டு தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து மாலையில் சிலார் குத்துதல், அக்கினிசட்டி எடுத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

Tags : Kuttadi Amman Balguda Festival ,
× RELATED பக்தனின் முற்பிறவி ஆசையை நிறைவேற்றிய சாய் பாபா..!!