பூந்தமல்லி: திருநெல்வேலியை சேர்ந்தவர் தங்ககுமார் (எ) அரவிந்தன் (29), குடும்பத்துடன் அம்பத்தூரில் தங்கி தனியார் நிறுவனத்தில் லோடு ஆட்டோ ஓட்டி வந்தார். அதே பகுதியை சேர்ந்தவர் கார்த்திக்ராஜா(26). டிரைவர். இவரும் நண்பர்கள். இந்நிலையில், தங்ககுமார் வீட்டுக்கு கார்த்திக்ராஜா அடிக்கடி வந்து செல்வது வழக்கம். அப்போது தங்ககுமாரின் மனைவிக்கும் கார்த்திக்ராஜாவுக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இவர்களது கள்ளக்காதல் தெரியவந்ததைத் தொடர்ந்து இருவரையும் தங்ககுமார் கண்டித்துள்ளார். ஆனாலும் அதன்பிறகும் இருவரும் கள்ளக்காதலை தொடர்ந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, கடந்த 2015ம் ஆண்டு அம்பத்தூர் எஸ்டேட் பகுதியில் மது போதையில் இருந்த கார்த்திக்ராஜா மீது கல்லை போட்டு தங்ககுமார் கொலை செய்துள்ளார்.இதுகுறித்து அம்பத்தூர் எஸ்டேட் போலீசார் வழக்குப் பதிவு செய்து தங்ககுமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு குறித்து பூந்தமல்லி 2வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி முருகேசன், நேற்று தீர்ப்பு கூறினார். தங்ககுமார் மீது குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு ஆயுள் தண்டனை, ரூ.1000 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது, கட்டத் தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து தங்ககுமார் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் புரட்சிதாசன் வாதாடினார்….
The post கள்ளக்காதல் விவகாரத்தில் நண்பரை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு appeared first on Dinakaran.