×

விருந்து விமர்சனம்

நிக்கி கல்ராணியின் தந்தை தொழிலதிபர் முகேஷ், தாயார் சோனா நாயர். அவர்கள் இருவரும் திடீரென்று மர்மமான முறையில் கொல்லப்படுகின்றனர். இதனால், நிக்கி கல்ராணிக்கு போலீசார் பாதுகாப்பு வழங்குகின்றனர். ஆனால், அதையும் மீறி நிக்கி கல்ராணியைக் கொல்ல ஒரு மர்ம கும்பல் முயற்சி செய்கிறது. அதை நிதி ஆலோசகர் அர்ஜூன் முறியடிக்கிறார். ஆனால், அவரைக் கொல்ல நிக்கி கல்ராணி முயற்சிக்க, நடந்த விஷயங்களை அர்ஜூன் விவரிக்கிறார்.

காட்டிலுள்ள மர்ம பங்களாவில் நடக்கும் விருந்தில், நிக்கி கல்ராணியை அவரது தாத்தா ஹரீஷ் பெராடி கொல்ல முயற்சிக்கிறார். அவரிடம் இருந்து நிக்கி கல்ராணியை அர்ஜூன் காப்பாற்றினாரா? முகேஷ், சோனா நாயர் எப்படி இறந்தனர்? அந்த விருந்தின் பின்னணி என்ன என்பது மீதி கதை. மீண்டும் ஆக்‌ஷ னில் களமிறங்கி, எதிரிகளைப் பொளந்திருக்கிறார் அர்ஜூன். அவருக்கு ஜோடி, டூயட் கிடையாது. நிக்கி கல்ராணியைச் சூழ்ந்த மர்மங்களை அவர் களையும் விவேகமான செயல்பாடுகள் விறுவிறுப்பு.

மர்மங்களைக் கண்டு பயந்து, பிறகு துணிச்சலுடன் விடை தேடும் காட்சிகளில் நிக்கி கல்ராணி பரபரப்பாக நடித்துள்ளார். ஹரீஷ் பெராடியின் கேரக்டர் எதிர்பாராதது. விருந்து நிகழ்ச்சி அலற வைக்கிறது. கதையின் ஓட்டத்துக்கு கிரீஷ் நெய்யார் நடிப்பு உதவுகிறது. பாலண்ணாவாக வரும் பைஜு சந்தோஷ் கம்பீரமாக நடித்துள்ளார். ரவிச்சந்திரன், பிரதீப் நாயரின் ஒளிப் பதிவு மிரட்டியுள்ளது.

அடர்த்தியான காடு, மலையை அழகாகக் காட்டி, விருந்து நிகழ்ச்சி யில் உள்மனதைப் பதற வைத்துள்ளது. ரதீஷ் வேகா பின்னணி இசை காட்சிகளுக்கு உயிரூட்டியுள்ளது. நாட்டில் நடக்கும் பரபரப்பான சம்பவங்களை மையப்படுத்தி, முழுநீள சஸ்பென்ஸ் திரில்லர் கதையை தொய்வின்றி இயக்கிய கண்ணன் தாமரக்குளத்துக்கு பாராட்டு. அர்ஜூன் சொல்லும் மூட நம்பிக்கைக்கு எதிரான சில கருத்துகள்
கவனத்தை ஈர்க்கின்றன. அக்கறையுடனும், இளைய தலைமுறைக்கான விழிப்புணர்வுடனும் உருவாக்கப்பட்ட படம், திரில்லர் பட ரசிகர்களுக்கு விருந்து… சமூகத்துக்கு தேவையான மருந்து.

The post விருந்து விமர்சனம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Nikki Kalrani ,Mukesh ,Sona Nair ,Queen ,Nikki ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED நடிகை பலாத்கார வழக்கில் நடிகர்கள்...