திருவனந்தபுரம்: மலையாள சினிமாவில் நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்களுக்கு எதிரான பாலியல் புகார்கள் குறித்து விசாரணை நடத்திய ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா தலைமையிலான கமிட்டியின் அறிக்கை வெளியான பின்னர் பிரபல மலையாள நடிகர்கள் மீது ஏராளமான பாலியல் புகார்கள் கூறப்பட்டன.
இது தொடர்பாக பிரபல மலையாள நடிகர்களான சித்திக், முகேஷ், ஜெயசூர்யா, இடைவேளை பாபு, மணியன் பிள்ளை ராஜு, நிவின் பாலி உள்பட சினிமா பிரபலங்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகளை போலீஸ் சிறப்பு புலனாய்வு பிரிவு விசாரணை நடத்தி வருகிறது.
இந்நிலையில் மலையாள நடிகர்கள் சங்கத்தில் உறுப்பினராக சேர்ப்பதாக கூறி நடிகர்கள் முகேஷ், இடைவேளை பாபு ஆகியோர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக எர்ணாகுளம் ஆலுவாவைச் சேர்ந்த ஒரு நடிகை போலீசில் புகார் செய்தார். இது தொடர்பாக நேற்று இடைவேளை பாபு மீது எர்ணாகுளம் நீதிமன்றத்திலும், முகேஷ் மீது வடக்காஞ்சேரி நீதிமன்றத்திலும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
The post நடிகை பலாத்கார வழக்கில் நடிகர்கள் முகேஷ், பாபுவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் appeared first on Dinakaran.