×

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினியின் கூலியில் இணைந்தார் உபேந்திரா

சென்னை: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் படம், ‘கூலி’. இதை சன் டிவி நெட்வொர்க் தலைவர் கலாநிதி மாறன் பிரமாண்டமாகத் தயாரிக்கிறார். லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். அனிருத் இசை அமைக்கிறார். கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் மூலம் ரஜினிகாந்த், லோகேஷ் கனகராஜ் முதல்முறையாக இணைந்துள்ளனர். அதுபோல், சன் பிக்சர்ஸ் தயாரிப்பிலும் முதல்முறையாக லோகேஷ் கனகராஜ் படம் இயக்குகிறார். இந்தப் புதிய கூட்டணியின் காரணமாக, இப்படத்தின் எதிர்பார்ப்பு பல மடங்கு கூடியிருக்கிறது.

தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் கன்னட முன்னணி நடிகர் உபேந்திரா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அவரது கேரக்டரின் பெயர், காளீசா என்று சூட்டப்பட்டுள்ளது. அவரது லுக்குடன் கூடிய போஸ்டர் நேற்று மாலை வௌியிடப்பட்டது. அவரது வித்தியாசமான தோற்றம் நேற்று சன் பிக்சர்ஸ் எக்ஸ் தளத்தில் வெளியானது. இதை ரசிகர்கள் பலர் பகிர்ந்து வருகின்றனர். அடுத்தடுத்த நாளில் இப்படத்தில் நடிக்கும் மேலும் சில நடிகர், நடிகையின் லுக் இடம்பெறுகிறது. ஏற்கனவே சவுபின் சாகிர், நாகார்ஜூனா, ஸ்ருதிஹாசன், சத்யராஜ் ஆகியோரின் லுக் வெளியிடப்பட்டு இருந்தது.

The post சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினியின் கூலியில் இணைந்தார் உபேந்திரா appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Upendra ,Rajinikanth ,Sun Pictures ,Chennai ,Sun TV Network ,Kalanithi Maran ,Lokesh Kanagaraj ,Anirudh ,Girish Gangatharan ,Rajini ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினியின் கூலியில் இணைந்தார் சத்யராஜ்