×

செங்கத்தில் அனுபாம்பிகை ரிஷபேஸ்வரர் கோயிலில் பொன்நிறமாக மாறிய நந்திபகவான் : பக்தர்கள் வழிபட்டு பரவசம்

செங்கம்: செங்கம் அனுபாம்பிகை ரிஷபேஸ்வரர் சிவன் கோயிலில் நந்தி பகவான் பொன் நிறமாக மாறி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் நகரில் பழமையான மிகவும் பிரசித்தி பெற்ற அனுபாம்பிகை ரிஷபேஸ்வரர் சிவன் கோயிலில் உள்ளது. இக்கோயிலில் தமிழ் மாத பிறப்பு அன்று காலையில் சிறப்பு பூஜை மற்றும் கோ பூஜை நடைபெறும். ஆரூத்ரா தரிசனம், பங்குனி உத்திரம், திருகல்யாணம், சித்திரை வசந்த உற்சவம், திருவூடல், சிவராத்தரி திருவிழா, திருவிளக்கு பூஜை, பிரதோஷ வழிபாடு, குரு பெயர்ச்சி, ராகுகேது பெயர்ச்சி, தட்சணாமுர்த்தி வழிபாடு உள்ளிட்ட சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.

இதிலும், குறிப்பாக ஆண்டு தோறும் தமிழ் மாதம் பங்குனி 2ம் நாள் மாலையில் கோயில் வளாகத்தில் முன்புறத்தில் உள்ள மிக பெரிய நந்தி பகவான் பொன்நிறமாக மாறி சில நிமிடங்கள் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்வு நடைபெறும் வழக்கம். இந்நிலையில், இந்த ஆண்டு பங்குனி மாதம் 3ம் தேதியான நேற்று மாலை நந்தி பகவான் மீது சூரிய ஓளி வீசியது. இதில் நந்தி பகவான் பொன் நிறமாக மாறியது. இதையறிந்த அப்பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் திரண்டு வந்து தரிசனம் செய்து பரவசம் அடைந்தனர். இதைத்தொடர்ந்து நந்தி பகவானுக்கு சிறப்பு அலங்காரம் செய்து பூஜைகள் நடைபெற்றது.

Tags : Rishabhaswara ,idol ,
× RELATED தமிழகத்தில் இரண்டு நாளில் சிலை கடத்திய 11 பேர் கைது