×

பிரபாஸ் ஜோடியாக இமான்வி

ஐதராபாத்: ‘கல்கி 2898 ஏடி’ என்ற படத்துக்குப் பிறகு பிரபாஸ் நடிக்கும் படத்தை ‘சீதா ராமம்’ ஹனு ராகவபுடி இயக்குகிறார். கற்பனைக்கும் எட்டாத கதையுடன் உருவாகும் பான் இந்தியா படமான இதை, மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கிறது. பிரபாஸ், ஹனு ராகவபுடி, மைத்ரி மூவி மேக்கர்ஸ் முதல்முறை இணைந்திருக்கும் இப்படத்துக்கு ‘பிரபாஸ்ஹனு’ என்று தற்காலிகமாகப் பெயரிடப்பட்டுள்ளது.

ஒவ்வொரு வரலாற்று நிகழ்வும் நம் உணர்ச்சிகளையும், எண்ணங்களையும் பிரதிபலிப்பது இல்லை. இந்தக் கதை ஒரு போர் வீரன் தனது தாய் மண்ணின் மக்களுக்காக, அவர்களுக்கான நீதியை வழங்கவே எழுதப்பட்டுள்ளது. கடந்த 1940களின் பின்னணியில் அமைக்கப்பட்டுள்ள வரலாற்றுப் புனைவு அல்லது மாற்று வரலாற்றுக்கதையான இது, உலகின் பார்வையில் இருந்து மறைத்து வைக்கப்பட்டிருக்கும் அல்லது புதைக்கப்பட்டிருக்கும் அநீதிகளுக்கும், மறந்துவிட்ட உண்மைகளுக்கும் ஒரே பதில் போர் என்று நம்பிய சமூகத்தின் நிழலில் இருந்து எழுந்த ஒரு போர் வீரனின் கதையாகும்.

பிரபாஸ் ஜோடியாக இமான்வி நடிக்கிறார். இவர்களுடன் மிதுன் சக்ரவர்த்தி, ஜெயப்பிரதா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். நவீன் யெர்னேனி, ஒய்.ரவிசங்கர் இணைந்து தயாரிக்கின்றனர். சுதீப் சட்டர்ஜி ஒளிப்பதிவு செய்ய, விஷால் சந்திரசேகர் இசை அமைக்கிறார். இப்படத்தின் தொடக்க விழா சமீபத்தில் ஐதராபாத்தில் நடந்தது.

The post பிரபாஸ் ஜோடியாக இமான்வி appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Imanvi ,Prabhas ,Hyderabad ,Hanu Raghavapudi ,India ,Maitri Movie Makers ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED தியேட்டரில் திடீரென்று உயிரிழந்த ரசிகர்