×

மாப்பிள்ளை ஊர்வலம் புல்டோசர் டிரைவருக்கு ரூ5 ஆயிரம் அபராதம்

பீடல்: மத்தியப் பிரதேச மாநிலம், பீடல் மாவட்டத்துக்கு உட்பட்ட ஜல்லார் கிராமத்தை சேர்ந்தவர் அன்குஷ் ஜெய்ஷ்வால். இவர் தனது  திருமணத்தின்போது மாப்பிள்ளை அழைப்புக்கு குதிரை, காரில் ஊர்வலம் தேவையில்லை என்று மறுத்து விட்டார். அதற்கு மாறாக, புல்டோசரில் மாப்பிள்ளை ஊர்வலம் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். இதன் காரணமாக, அவருடைய விருப்பப்படி புல்டோசரில் மாப்பிள்ளை ஊர்வலம் நடைபெற்றது.  மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட புல்டோசரில் அமர்ந்தபடி மிகுந்த உற்சாகத்தோடு மாப்பிள்ளை அன்குஷ் ஊர்வலமாக திருமண மண்டபத்தை அடைந்தார். இந்நிலையில், புல்டோசரை மாப்பிள்ளை ஊர்வலத்துக்கு பயன்படுத்தியது தொடர்பாக அதன் டிரைவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. புல்டோசர் வணிக பயன்பாட்டுக்கான இயந்திரமாகும். இதை பொதுமக்களை அழைத்து செல்வதற்கு பயன்படுத்தக் கூடாது. எனவே, மோட்டார் வாகன விதிகளை மீறியதாக புல்டோசரை ஓட்டிய ரவி பராஸ்கர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் அவருக்கு ரூ.5 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது….

The post மாப்பிள்ளை ஊர்வலம் புல்டோசர் டிரைவருக்கு ரூ5 ஆயிரம் அபராதம் appeared first on Dinakaran.

Tags : Bidal ,Ankush Jaishwal ,Jallar ,Bidal district, Madhya Pradesh ,
× RELATED பழங்குடியினர் நலனுக்காக ரூ.24000 கோடி...