×

பழங்குடியினர் நலனுக்காக ரூ.24000 கோடி திட்டம் தொடக்கம்: பிரதமர் மோடி பிரசாரம்

பீடல்: மத்தியப்பிரதேசத்தில் நாளை மறுநாள் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனையொட்டி பீடல் மாவட்டத்தில் நடந்த பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது பேசிய பிரதமர் மோடி, ஏராளமான மக்கள் திரண்டு இருப்பது மத்தியப்பிரதேசத்தில் பாஜவின் வெற்றி உறுதி என்பதை உணர்த்துகிறது. நாளை(இன்று) பழங்குடியின சுதந்திர போராட்ட வீரரான பிர்சா முண்டா பிறந்த நாள். நான் ஜார்கண்ட் சென்று பிர்சா முண்டாவிற்கு மரியாதை செலுத்த இருக்கிறேன். இந்த ஒட்டுமொத்த நாடும் பக்வான் பிர்சா முண்டா ஜெயந்தியை கொண்டாடுகிறது. இந்த நாளில் பழங்குடியின மக்களின் நலனுக்காக ஒன்றிய அரசு ரூ.24,000கோடி மதிப்பிலான திட்டம் துவங்கப்பட உள்ளது. தேர்தலுக்கு முன்பாக காங்கிரஸ் கட்சி தோல்வியை ஏற்றுக்கொண்டுள்ளது” என்றார்.

* தற்கொலை மிரட்டல் -2 பேர் கைது
ஜார்கண்ட் மாநிலத்தின் குந்திக்கு வருகை தரும் பிரதமர் மோடி சர்னாயிசத்தை மதமாக அங்கீகரிக்காவிட்டால் தற்கொலை செய்து கொள்வோம் என்று ஆதிவாசி செங்கெல் அபியான் அமைப்பை சேர்ந்த 2 பேர் மிரட்டல் விடுத்தனர். இதனை தொடர்ந்து கிழக்கு சிங்பும் மாவட்டத்தை சேர்ந்த அவர்கள் இரண்டு பேரையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் கைது செய்தனர்.

The post பழங்குடியினர் நலனுக்காக ரூ.24000 கோடி திட்டம் தொடக்கம்: பிரதமர் மோடி பிரசாரம் appeared first on Dinakaran.

Tags : PM Modi ,Baidal ,Madhya Pradesh ,Bidal district ,Modi ,Dinakaran ,
× RELATED நாட்டில் இருந்து வறுமையை முற்றிலும்...