×

பராரி படத்துக்கு சர்வதேச விருது

சென்னை: ‘தோழர் வெங்கடேசன்’ எனும் படத்தின் மூலம் அறிமுகமான ஹரி சங்கர் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘பராரி’ எனும் திரைப்படம், ஹுஸ்டன் நகரில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த வெளிநாட்டு திரைப்படத்திற்கான விருதை வென்றிருக்கிறது. அறிமுக இயக்குநர் எழில் பெரியவேடி இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘பராரி’ படத்தில் ஹரி சங்கர், சங்கீதா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

தர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். இந்தப்படத்தை காலா பிலிம்ஸ் எனும் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஹரி சங்கர் தயாரித்திருக்கிறார்.‌ இப்படத்தை இயக்குநர் ராஜு முருகன் வழங்குகிறார். விரைவில் வெளியாகவிருக்கும் ‘பராரி’ திரைப்படம் 57 ஆவது வேர்ல்ட் ஃபெஸ்ட் ஹுஸ்டன் ரெமி விருதிற்கான சர்வதேச திரைப்பட விழாவில், சிறந்த வெளிநாட்டு திரைப்படத்திற்கான வெண்கல பதக்கத்தை வென்றிருக்கிறது.

 

The post பராரி படத்துக்கு சர்வதேச விருது appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Barari ,CHENNAI ,Hari Shankar ,Houston International Film Festival ,Eshil Periyavedi ,Parari ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED ஹாரன் ஒலி அதிகரித்தால் சிவப்பு...