கொடைக்கானல் பூம்பாறையில் குழந்தை வேலப்பர் கோயில் தேரோட்டம் : பக்தர்கள் குவிந்தனர்

கொடைக்கானல்: கொடைக்கானல் அருகே பூம்பாறையில் நடந்த குழந்தை வேலப்பர் கோயில் தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகே பூம்பாறையில் குழந்தை வேலப்பர் கோயில் உள்ளது. இங்கு தேரோட்ட விழா கடந்த 23ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் குழந்தை வேலப்பர் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று மாலை வெகு விமரிசையாக நடந்தது.

காலை 11 மணிக்கு குழந்தை வேலப்பர் திருத்தேரிலிருந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். சிறப்பு அபிஷேகங்களுக்கு பின் மாலை 4 மணிக்கு திருத்தேரோட்டம் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ‘அரோகரா’ கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். மேலும் அங்கப்பிரதட்சணம், வேல்குத்தி, பறவை காவடி எடுத்து தங்களின் வேண்டுதல்களை நிறைவேற்றினர். நிகழ்ச்சியில் ஐபி.செந்தில்குமார் எம்எல்ஏ உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: