×

வேல்ஸ் திரைப்பட விருது விழாவில் பார்த்திபன் வசந்த பாலன்

சென்னை: மெய் எனும் பெயரில் திரைப்பட ஆர்வலர்கள், வேல்ஸ் பல்கலைக்கழகத்துடன் இணைந்து கடந்த இரண்டு ஆண்டுகளாக திரைப்பட விருது விழா நடத்தி வருகின்றது. மாதந்தோறும் நடந்து வரும் இந்த திரைப்பட திருவிழாவினை அதன் நிர்வாக இயக்குநரான எஸ்.ஜெயசீலன் மற்றும் பி.அன்பழகன் வழிநடத்தி வருகின்றார்கள். மெய் சர்வதேச திரைப்பட திரையிடல் குழு மற்றும் வேல்ஸ் பல்கலைக்கழகம் இணைந்து சமீபத்தில் நடத்திய திரைப்பட விழாவில், மாணவர்கள் முன்னிலையில் திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள, தகுதி வாய்ந்த படைப்புகளைத் தேர்வு செய்து, படைப்பாளிகளுக்கு விருது வழங்கப்பட்டது.

தேசிய விருது பெற்ற இயக்குநர்களான பார்த்திபன் மற்றும் வசந்த பாலன் ஆகியோர் இவ்விழாவில் கலந்துகொண்டு படைப்பாளிகளுக்கு விருது வழங்கி கௌரவித்தனர். வேல்ஸ் குழுமத்தின் தலைவர் ஐசரி கே கணேஷ், ஏ. ஜோதி முருகன், வேல்ஸ் துணைத் தலைவர் எஸ். ஸ்ரீமன் நாராயணன், எம். பாஸ்கரன், பி. சரவணன், எஸ். வளர்மதி, எஸ். மனோஜ் பிரபாகர், செந்தில் குமார். ஆகியோர் இந்த திரையிடலில் மிகபெரும் பங்களித்துள்ளனர்.

The post வேல்ஸ் திரைப்பட விருது விழாவில் பார்த்திபன் வசந்த பாலன் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Parthiban ,Wales Film Awards Festival ,Chennai ,Mei ,Film Awards Ceremony ,University of Wales ,S. Jaiselan ,B. Anbhaghan ,Bartiban Vasantha Balan ,Wales Film Awards ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED முகநூலில் கொலை மிரட்டல் ஊராட்சி தலைவரின் கணவர் கைது