×

மந்தன் தாக்கத்தை தடுக்கும் மார்த்தாண்ட பைரவர்

பைரவர் உக்கிரமான தேவராக விளங்கினாலும் பெருங்கருணை மிக்கவராவார். சிவாலயங்களில் பைரவர் வழிபாடு ஓர் அங்கமாக உள்ளது. வேத, இதிகாச, சைவ, சாக்த, கௌமார, சௌர மார்க்கங்களிலும் ஜைனம், பௌத்தம் முதலான பிற மார்க்கங்களிலும் பைரவரை சிறப்புடன் போற்றுகின்றனர். பைரவர் மந்திர யந்திர தந்திர நாயகராவார். பூத வேதாள பிரேத பிசாசுக் கூட்டங்களை விரட்டும் பெருங்கருணை உடையவர். இவரே சனீஸ்வர பகவானின் குருவாகவும் விளங்குகிறார். பைரவரை வணங்குவதால் ஏழரை நாட்டுச் சனி, ஜென்மச்சனி, அர்த்தாஷ்டம சனி, அஷ்டம சனி ஆகியவற்றில் இருந்து விடுபடலாம்.

சகல உலகங்களையும் அதில் அமைந்துள்ள, ஆலயங்களையும், தீர்த்தங்களையும் காவல் புரிபவர் ஸ்ரீபைரவர் ஆவார் க்ஷேத்திரங்களைக் காவல் புரிவதால் அவர்  க்ஷேத்ரபாலகர்  என்றும் கடல் முதலான பெரிய நீர்ப்பகுதிகள் பொங்கி பூமியை அழித்து விடாமல் கட்டுக்குள் வைத்திருப்பதால் தீர்த்த பாலகர் என்றும் மக்களிடம் அறிவுச் சுடரை வளர்ப்பதால் ஞான பைரவர் என்றும், யோகங்களை அள்ளித்தருவதால் யோகபைரவர் என்றும், யோகிகளுக்கு காவலாக இருப்பதோடு மகா வீரர்களிடம் உக்ர பைரவராகவும், பஞ்ச பூதங்களினால் உண்டாகும் சீற்றங்களில் இருந்து காக்கும் பூத பைரவராகவும் இன்னும் பல்வேறு வடிவங்கள் தாங்கி அன்பர்களுக்கு அருட் பாலிக்கின்றார்.

பைரவரை வழிபட்டால் சகல சம்பத்துகளையும் பெறலாம் என்பதில் துளியும் சந்தேகமில்லை. இத்தனை சிறப்புமிக்க  பைரவர் சூரிய பகவானின் அம்சமாக மார்த்தாண்ட பைரவராக அருள்கிறார். லலிதா ஸஹஸ்ஹரநாமம் ‘‘மார்த்தாண்ட பைரவாராத்யா’’ (மார்த்தாண்டன் எனும் சூரியபகவானின் அம்சமான பைரவரால் ஆராதிக்கப்படுபவள்) என இந்த பைரவரைப் போற்றுகிறது.  அகத்தியரும் தன்  ஆதித்ய ஹ்ருதய ஸ்தோத்திரத்தில் இந்த பைரவரைப்பற்றி குறிப்பிட்டுள்ளார் மார்த்தாண்ட பைரவரின் த்யான ஸ்லோகத்தின்படி வரையப்பட்ட அபூர்வமான திருவுருவை தரிசித்து மகிழலாம்.

- அபர்ணா

Tags : one ,
× RELATED பாஜ ஆட்சியை அகற்றுவதற்கு இந்தியா...