×

சதுர்’ படத்தில் 1250 விஎஃப்எக்ஸ் காட்சிகள்

சென்னை: அமர் ரமேஷ், அஜித் விக்னேஷ், தாமோதரன், செல்லா, ‘ஜீவா’ ரவி, சூர்யா, அர்னவ் ஹரிஜா, பிரதீப் அரி, கிரிஷ் பாலா, ஜெகன் கிரிஷ், ‘பாய்ஸ்’ ராஜன், ராஜன் கிருஷ்ணமூர்த்தி நடித்துள்ள படம், ‘சதுர்’. இந்தப் படத்ைத அகஸ்டின் பிரபு எழுதி இயக்கி, விஎஃப்எக்ஸ் பணி மேற்கொண்டுள்ளார். ராக்ஸ் நேச்சர் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் ராம் மணிகண்டன் தயாரித்துள்ளார். ராம் டி.சந்தர் ஒளிப்பதிவு செய்ய, ஆதர்ஷ் இசை அமைத்துள்ளார். இப்படத்தின் டிரைலரை தயாரிப்பாளர் ஜி.தனஞ்செயன் வெளியிட்டார். அப்போது அகஸ்டின் பிரபு பேசியதாவது:

இப்படத்தில் 1,250 விஎஃப்எக்ஸ் ஷாட்டுகள் இருக்கிறது. தயாரிப்பாளரிடம் இந்தக் கதையைச் சொல்லி, தியேட்டருக்கு வரும் ரசிகர்களுக்கு ஒரு புதுமையான அனுபவத்தைக் கொடுக்க வேண்டும் என்றேன். பிறகு பைலட் படத்தை உருவாக்கிக் காட்டினேன். உடனே அவர் என்னை முழுமைாயக நம்பினார். கடலுக்குள் நடக்கும் காட்சி மற்றும் கார் சேஸ், பிளைட் பைட், ஹிஸ்டாரிக்கல் காட்சிகள் உள்பட பிரமிக்கத்தக்க காட்சிகள் நிறைய இருக்கிறது. சுமார் 5,000 வருடங்களுக்கு முன்பு கதை தொடங்குகிறது. 1945, 1967 ஆகிய காலக்கட்டங்களில் நடந்து, இறுதியில் இன்றைய வருடத்தில் முடிகிறது. அனைத்து ரசிகர்களுக்கும் ‘சதுர்’ படம் புதிய அனுபவமாக இருக்கும். அடுத்த மாதம் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளோம்.

The post சதுர்’ படத்தில் 1250 விஎஃப்எக்ஸ் காட்சிகள் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : CHENNAI ,Amar Ramesh ,Ajith Vignesh ,Damodaran ,Cella ,Jeeva ,Ravi ,Surya ,Arnav Harija ,Pradeep Ari ,Krish Bala ,Jagan Krish ,Boys ,Rajan ,Rajan Krishnamurthy ,Augustine Prabhu ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED ஹாரன் ஒலி அதிகரித்தால் சிவப்பு...