×

தரமற்ற கலப்பட உணவுகள்; சந்தீப் கிஷன் ஓட்டலுக்கு நோட்டீஸ்

ஐதராபாத்: பிரபல நடிகர் சந்தீப் கிஷனுக்குச் சொந்தமான உணவகம் தெலங்கானாவின் பிரபலமான ‘விவாஹா போஜனம்பு’. இதன் கிளை சென்னையிலும் உள்ளது. தெலங்கானாவில் உள்ள உணவகத்தின் கிளையொன்றில் பல உணவுப் பாதுகாப்பு மீறல்கள் இருப்பதாக உணவுப் பாதுகாப்பு ஆணையர் பணிக்குழுவுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நடத்தப்பட்ட ஆய்வில், இந்த உணவகத்தில் காலாவதியான அரிசி மற்றும் தேங்காய் துருவலில் செயற்கை உணவு வண்ணம் பூசப்பட்டிருப்பது தெரியவந்தது. மேலும் சமைத்த உணவுகள் மற்றும் மூலப்பொருட்களிலும் கலப்படம் இருப்பதை கண்டுபிடித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆய்வின் போது சமையல் அறைக்குள் வாய்க்கால் தண்ணீர் தேங்கி இருப்பது கண்டறியப்பட்டது.

உணவகத்தில் உணவு கையாளுபவர்களுக்கு மருத்துவ தகுதிச் சான்றிதழையோ அல்லது சமையலில் பயன்படுத்தப்படும் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் பபிள் வாட்டர்க்கான நீர் பகுப்பாய்வு அறிக்கையையோ உணவகம் வழங்கத் தவறிவிட்டது எனவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக உணவகத்துக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். இந்நிலையில் சந்தீப் கிஷன் டிவிட்டரில் கூறும்போது, ‘ஒரு தகவல் பரப்புவதற்கு முன், உண்மைகளை சரிபார்க்க எனது அன்பான ‘நலம் விரும்பிகளை’ கேட்டுக்கொள்கிறேன். நாங்கள் குழுவாக 8 ஆண்டுகளாக எங்கள் உணவு மற்றும் நேர்மையுடன் ஒரு விசுவாசமான வாடிக்கையாளர்களை உருவாக்கி இருக்கிறோம், உங்கள் அன்பை நாங்கள் ஒருபோதும் சாதாரணமாக எடுத்துக் கொள்ள மாட்டோம்’ என்றார்.

 

The post தரமற்ற கலப்பட உணவுகள்; சந்தீப் கிஷன் ஓட்டலுக்கு நோட்டீஸ் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Sandeep Kishan Hotel ,Hyderabad ,Telangana ,Vivaha Bhojanambu ,Sandeep Kishan ,Chennai ,Food Safety Commissioner Task Force ,Telangana.… ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED தெலுங்கானாவில் 6 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை