×

போலியான பில்கள் மூலம் எம்ஜிஎம் குழுமம் ரூ.400 கோடி வரிஏய்ப்பு: ரூ.2.5 கோடி நகைகள், சொத்து ஆவணங்கள் பறிமுதல்; கணக்கில் வராத ரூ.3 கோடி சிக்கியது

சென்னை: வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில், போலி பில்கள் மூலம் ரூ.400 கோடி வரி ஏய்ப்பு செய்ததும், பல கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள், கணக்கில் வராத ரூ.3 கோடி பணம், ரூ.2.5 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. எம்.ஜி.எம். குழுமத்துக்கு சொந்தமாக, சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள எம்.ஜி.எம் பொழுதுபோக்கு பூங்கா, எம்.ஜி.எம். ரிசார்ட், மதுபான தொழிற்சாலை மற்றும் திண்டிவனம், காஞ்சிபுரம், ஐதராபாத் உள்பட நாடு முழுவதும் நிறுவனங்கள் உள்ளது. இந்த குழுமத்தின் இயக்குநராக நெல்லை மாவட்டத்தை சேர்ந்த நேசமணி முத்து உள்ளார். வெளிநாடுகளில் நிறுவனங்கள் தொடங்கியதில் பல நூறு கோடி ரூபாய் சட்டவிரோதமாக பண பரிமாற்றம் செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.அதைதொடர்ந்து எம்.ஜி.எம். குழுமத்துக்கு சொந்தமான இடங்கள், அலுவலகங்கள், மயிலாப்பூர் முத்துபாண்டி அவென்யூவில் உள்ள எம்.ஜி.எம். குழுமத்தின் இயக்குநர் நேசமணி முத்துவின் வீடு, டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள எம்.ஜி.எம். குழுமத்தின் தலைமை அலுவலகம் என நாடு முழுவதும் 40 இடங்களில் கடந்த 15ம் தேதி காலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதுதவிர எம்.ஜி.எம் குழுமம் சார்பில் நடத்தப்பட்ட பொழுது போக்கு பூங்காக்கள், நிறுவனங்களில் போலி பில்கள் பயன்படுத்தியதும், காசோலைகள் மூலம் கொள்முதல் செய்யாத பொருட்கள் கொள்முதல் செய்ததாகவும் என பல வழிகளில் இந்த குழுமம் ரூ.400 கோடி வரை வருமான வரித்துறையை திட்டமிட்டு வரி ஏய்ப்பு செய்தது சோதனையில் கிடைத்த ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுதவிர, எம்.ஜி.எம் குழுமம் வெளிநாடுகளில் உள்ள ஓட்டல்களில் முதலீடு செய்து இருப்பதற்கான ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும், இந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.3 கோடி ரொக்க பணம், ரூ.2.5 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட பணம், தங்க நகைகள், பல கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் குறித்து எம்.ஜி.எம்.குழுமத்தின் உரிமையாளர்கள் மற்றும் நிர்வாகிகளிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்….

The post போலியான பில்கள் மூலம் எம்ஜிஎம் குழுமம் ரூ.400 கோடி வரிஏய்ப்பு: ரூ.2.5 கோடி நகைகள், சொத்து ஆவணங்கள் பறிமுதல்; கணக்கில் வராத ரூ.3 கோடி சிக்கியது appeared first on Dinakaran.

Tags : MGM Group ,CHENNAI ,Income Tax Department ,Dinakaran ,
× RELATED சென்னையில் வருமான வரித்துறை சோதனை:...