×

இயக்குனர் ரவிசங்கர் தற்கொலை

சென்னை: தமிழ் சினிமாவில் குணால் மற்றும் மனோஜ் நடிப்பில் வெளியான ‘வருஷமெல்லாம் வசந்தம்’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ஆர்.ரவிசங்கர்(63). இவர் குதிரை சிறுகதை மூலம் எழுத்தாளராக அறிமுகமானார். இவர் பிரபல இயக்குனர்கள் விக்ரமன் மற்றும் கே.பாக்யராஜ் ஆகியோரிடம் உதவியாளராக பணிபுரிந்துள்ளார்.

அதன் பிறகு ‘சூர்ய வம்சம்’ படத்தில் இடம்பெற்ற ‘ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ’ உள்ளிட்ட பல ஹிட் பாடல்களையும் எழுதி உள்ளார். இந்நிலையில் ரவிசங்கர் நேற்று சென்னை கேகே நகரில் உள்ள அவருடைய அறையில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவருடைய தற்கொலைக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். அவருடைய மரணம் சினிமா வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

The post இயக்குனர் ரவிசங்கர் தற்கொலை appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Ravi Shankar ,Chennai ,R. Ravi Shankar ,Kunal ,Manoj ,Vikraman ,K. Bhagyaraj ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED இந்திய பொருளாதாரத்தை சீர்குலைக்க...