×

ராகுல் மீதான தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியால் அமலாக்கத்துறை மூலம் பாஜக பழிவாங்குகிறது: காங்கிரஸ் குற்றச்சாட்டு

டெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கில் இதுவரை முதல் தகவல் அறிக்கை ஏன் பதிவு செய்யப்படவில்லை என காங்கிரஸ் கேள்வி எழுப்பியது. மறைந்த முன்னாள் பிரதமர் நேரு நிறுவிய நேஷனல் ஹெரால்டு பத்திரிகையின் பங்குகளை சோனியா காந்தி, ராகுல் காந்தி பங்குதாரர்களாக உள்ள யங் இந்தியா லிமிடெட் நிறுவனத்துக்கு மாற்றப்பட்டது தொடர்பாக, பாஜ தலைவர் சுப்பிரமணிய சுவாமி, டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. இதுதொடர்பாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியிடம் கடந்த 13ம் தேதி முதல் தொடர்ந்து 3 நாட்கள் டெல்லியில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணை நடந்தது. அவரிடம் மூன்று நாட்களில் சுமார் 30 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், கடந்த வியாழக்கிழமையும் விசாரணைக்கு ஆஜராகும்படி ராகுல் காந்திக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பியிருந்தனர். இதையடுத்து சோனியா காந்தியின் உடல்நிலையை கருத்தில் கொண்டு அவகாசம் கோரியதை தொடர்ந்து ஜூன் 20ம் தேதி(நேற்று) ஆஜராகும்படி ராகுல் காந்திக்கு அமலாக்கத்துறை தரப்பில் மீண்டும் சம்மன் அனுப்பட்டது. இந்த நிலையில் நேஷனல் ஹெரால்டு வழக்கில் ராகுல் காந்தி நேற்று 4வது நாளாக டெல்லி அப்துல் கலாம் சாலையில் இருக்கும் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார். காலை சுமார் 11.15 மணிக்கு ஆஜரான ராகுல் காந்தியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் இரவு 8.15 மணி வரை விசாரணை நடத்தினர். பின்னர் இன்று மீண்டும் விசாரணைக்கு ஆஜராகவும் சம்மன் தரப்பட்டுள்ளது. இந்நிலையில் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் மனு சிங்வி; நேஷனல் ஹெரால்டு வழக்கில் இதுவரை முதல் தகவல் அறிக்கை ஏன் பதிவு செய்யப்படவில்லை? நேஷனல் ஹெரால்டு வழக்கில் பணம் யாருக்கு கைமாற்றப்பட்டது என அமலாக்கத்துறை விளக்க வேண்டும். ராகுல் மீதான தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியால் அமலாக்கத்துறை மூலம் பாஜக பழிவாங்குவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். …

The post ராகுல் மீதான தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியால் அமலாக்கத்துறை மூலம் பாஜக பழிவாங்குகிறது: காங்கிரஸ் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : bajka ,rahul ,congress ,Delhi ,National Herald ,Enforcement Department ,
× RELATED இன்று மாலை 5 மணிக்கு செய்தியாளர்களை...