×

11 வருடங்களுக்குப் பிறகு ரிலீசாகும் மத கஜ ராஜா: சுந்தர்.சி, விஷால் இணைந்த முதல் படம்

சென்னை: பல வெற்றிப் படங்களை இயக்கியுள்ள சுந்தர்.சி, கடந்த 2013ம் ஆண்டு இயக்கி முடித்த படம், ‘மத கஜ ராஜா’. ஜெமினி பிலிம் சர்கியூட் தயாரித்த இப்படத்தில் விஷால், அஞ்சலி, வரலட்சுமி, சந்தானம் நடித்தனர். ஒரு பாடலுக்கு சதா ஆடினார். சுந்தர்.சி, வெங்கட் ராகவன் இணைந்து கதை எழுதினர். ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்ய, விஜய் ஆண்டனி இசை அமைத்தார். கடந்த 2015ல் விஷால் நடித்த ‘ஆம்பள’ என்ற படத்தை இயக்கிய சுந்தர்.சி, கடந்த 2019ல் மீண்டும் விஷால் நடிப்பில் ‘ஆக்‌ஷன்’ படத்தை இயக்கினார். ஆனால், முதன்முதலில் விஷாலை வைத்து சுந்தர்.சி இயக்கிய ‘மத கஜ ராஜா’ என்ற படம், பல்வேறு காரணங்களால் கடந்த 11 ஆண்டுகளாக திரையிட முடியாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இப்படத்தின் பெயர், ‘எம்ஜிஆர்’ என்று ஆங்கிலத்தில் குறிப்பிடப்படுகிறது.

இந்நிலையில், ‘மத கஜ ராஜா’ படம் ஏன் 11 வருடங்களாக ரிலீசாகவில்லை என்று சுந்தர்.சியிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ‘இப்படத்தை நான் இயக்கி முடித்து 11 ஆண்டுகள் ஆகிறது. இப்போது படம் திரைக்கு வந்தாலும் மிகப்பெரிய ஹிட்டாகும். நானும், விஷாலும் அப்படத்தின் தயாரிப்பு நிறுவனத்திடம் பலமுறை கேட்டுவிட்டோம். நாங்களே பணத்தை தந்து படத்தை ரிலீஸ் செய்வதாகவும் சொன்னோம். ஆனால், அப்படத்தின் தயாரிப்பு நிறுவனத்துக்கு ஏற்கனவே ஒரு படத்தால் ஏற்பட்ட இழப்பின் காரணமாக, இப்படத்தை இன்னும் வெளியிடாமல் இருக்கின்றனர்’ என்று கூறியிருந்தார். இந்நிலையில், ‘மத கஜ ராஜா’ படம் வரும் ஆகஸ்ட் மாதம் திரைக்கு வருவதாக, ஜெமினி பிலிம் சர்கியூட் வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.

The post 11 வருடங்களுக்குப் பிறகு ரிலீசாகும் மத கஜ ராஜா: சுந்தர்.சி, விஷால் இணைந்த முதல் படம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Sundar.C ,Vishal ,CHENNAI ,Sundar C ,Gemini Film Circuit ,Anjali ,Varalakshmi ,Santhanam ,Sada ,Raja ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED ஹேமா கமிஷன் போல் குழு அமைக்கப்படும்: விஷால்