×

விகேடி சாலையில் நெல் குவியல்: விபத்து ஏற்படும் அபாயம்

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அருகே கரைமேடு பகுதியில் உள்ள விகேடி சாலையில் போடப்பட்டுள்ள நெற்குவியலால் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாக வாகன ஓட்டிகள் அச்சம் தெரிவித்துள்ளனர். சேத்தியாத்தோப்பு அருகே உள்ள கரைமேடு ஊராட்சி பகுதியில் உள்ள விகேடி சாலையில் அப்பகுதியின் விவசாயிகள் அறுவடை செய்யும் நெல்லை சாலையிலேயே கொட்டிவைத்து குவியலாய் போட்டு வைத்துள்ளனர். இதனால் அவ்வழியே இரவு நேரத்தில் செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகள் நெல் குவியலில் மோதி விபத்து ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இரவு பகல் முழுவதும் பரபரப்பான சாலை என்பதால் விபத்துகள் ஏற்படும் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு விருத்தாசலம்-புவனகிரி சாலையில் வளையமாதேதி (அம்மன் குப்பம்) பகுதியில் சாலையின் நடுவே கொட்டப்பட்டிருந்த நெல் குவியலால் பள்ளி மாணவர்கள் காயமடைந்தது குறிப்பிடத்தக்கது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து நெல்குவியல்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்….

The post விகேடி சாலையில் நெல் குவியல்: விபத்து ஏற்படும் அபாயம் appeared first on Dinakaran.

Tags : VKD ,Chethiyathoppu ,Karaimedu ,Dinakaran ,
× RELATED சேத்தியாத்தோப்பு அருகே விவசாயிகளை ஏமாற்றி போலி உரம் விற்பனை