×

ராஜ் அய்யப்பா, டெல்னா டேவிஸ் நடிக்கும் லவ் இங்க்

சென்னை: எம்.ஆர் பிக்சர்ஸ் சார்பில் ஏ.மகேந்திரன் ஆதிகேசவன் தயாரிக்கும் ரோம்-காம் படம், ‘லவ் இங்க்’. தங்களுக்கு விருப்பமான நபரின் பெயரையோ அல்லது காதல் சின்னத்தையோ டாட்டூவாக வரைவதுதான் ‘லவ் இங்க்’. இதன் இன்னொரு பக்கம் குறித்து சொல்லும் கதையுடன் உருவாகும் இப்படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு இன்று தொடங்கியது. அஜித் குமாரின் ’வலிமை’, அதர்வா முரளியின் ’100’ உள்பட சில படங்களிலும், வெப்தொடர்களிலும் நடித்துள்ள ராஜ் அய்யப்பா ஹீரோவாக நடிக்க, அவரது ஜோடியாக ‘குரங்கு பொம்மை’ டெல்னா டேவிஸ் நடிக்கிறார்.

இப்படத்தை எழுதி இயக்கும் மேகராஜ் தாஸ் கூறுகையில், ‘பக்கத்துவீட்டு பையன் மாதிரி ஒருவரை தேடினேன். ’வலிமை’ படத்தில் நடித்திருந்த ராஜ் அய்யப்பாவை பார்த்ததும், பொருத்தமாக இருப்பார் என்று தேர்வு செய்தேன். மற்றும் யோகி பாபு, திலீபன், விடிவி கணேஷ், முனீஷ்காந்த், அர்ஷத், பட்டிமன்றம் ராஜா, வினோதினி, மாறன், சுபாஷினி கண்ணன், கேபிஒய் வினோத், ’மார்க் ஆண்டனி’ டிஎஸ்ஜி, மவுரிஷ் தாஸ், பிரீதா, வினோத் முன்னா நடிக்கின்றனர். ஏ.எஸ்.அர்ஜூனா ஒளிப்பதிவு செய்ய, விஷ்ணு விஜய் இசை அமைக்கிறார். சென்னை, தஞ்சாவூர் ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது’ என்றார்.

The post ராஜ் அய்யப்பா, டெல்னா டேவிஸ் நடிக்கும் லவ் இங்க் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Raj Ayyappa ,Delna Davis ,Chennai ,A. Mahendran Adhikesavan ,MR Pictures ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED ஹாரன் ஒலி அதிகரித்தால் சிவப்பு...