×

26ம் தேதி வெளியாகும் டெட்பூல் அன்ட் வோல்வரின்

லாஸ் ஏஞ்சல்ஸ்: மார்வெல் நிறுவன சூப்பர் ஹீரோக்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கின்றனர். ‘கேப்டன் அமெரிக்கா’, ‘அயர்ன்மேன்’, ‘தோர்’, ‘ஹல்க்’ என்று சொல்லப்படும் அந்த பட்டியலில், வோல்வரின் மற்றும் டெட்பூல் கதாபாத்திரத்துக்கு அதிக ரசிகர்கள் இருக்கின்றனர். இந்நிலையில், வோல்வரின் மற்றும் டெட்பூல் கதாபாத்திரத்தை இணைத்து உருவாக்கப்பட்டுள்ள படம், ‘டெட்பூல் அன்ட் வோல்வரின்’.

மார்வெல் சினிமாடிக் யுனிவர்ஸின் 34வது படமான இது, ‘டெட்பூல்’ மற்றும் ‘டெட்பூல் 2’ ஆகிய படங்களின் தொடர்ச்சியாக உருவாக்கப்பட்டுள்ளது. ஷான் லெவி இயக்கியுள்ள இதில் ஹியூ ஜேக்மேன் வோல்வரினாகவும், ரியான் ரெனால்ட்ஸ் டெட்பூலாகவும் நடித்துள்ளனர். இப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது. வரும் 26ம் தேதி தமிழ் உள்பட பல்வேறு மொழிகளில் படம் திரைக்கு வருகிறது.

The post 26ம் தேதி வெளியாகும் டெட்பூல் அன்ட் வோல்வரின் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Los Angeles ,Marvel ,America ,Ironman ,Thor ,Hulk ,Wolverine ,Deadpool ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் மிதமான நிலநடுக்கம்