×

களக்காடு சத்தியவாகீஸ்வரர் கோயிலில் மஹாருத்ர சண்டி யாகம்

களக்காடு: களக்காடு சத்தியவாகீஸ்வரர், கோமதி அம்பாள் கோயிலில் உலக நண்மை வேண்டி மஹா ருத்ர சண்டி யாகம் 3 நாட்கள் நடந்தது. இதற்காக கோயில் கொலு மண்டபம், மணி மண்டபங்களில் சிறப்பு யாக சாலைகள் அமைக்கப்பட்டது. இதையொட்டி முதல் நாள் மங்கள இசை, அனுக்கை, விக்னேஷ்வர பூஜை, யஜமான வர்ணம், மஹா கணபதி ஹோமம் நடந்தது. தொடர்ந்து மஹா ருத்ர சண்டி யாகம் தொடங்கியது. மாலையிலும் சிறப்பு யாக சாலை பூஜைகள் நடந்தது. 2ம் நாள் காலையிலும், மாலையிலும் சிறப்பு யாக சாலை பூஜைகள் நடத்தப்பட்டது.

மூன்றாம் நாள் காலை 8.30 மணி முதல் கோ பூஜை, ப்ரம்மச்சாரி பூஜை, நவக்கிரக ஹோமம், கன்யா பூஜை, தம்பதி பூஜை, மஹா பூர்ணாகுதி நிகழ்ச்சிகள் இடம்பெற்றது. அதனைத்தொடர்ந்து யாக சாலையில் இருந்து கடம் புறப்பாடும், சுவாமி, அம்பாள் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மகா அபிஷேகமும், அலங்கார தீபாராதனைகளும் நடந்தன. மாலையில் சுவாமி, அம்பாளுக்கு புஷ்பாஞ்சலி நடத்தப்பட்டது. தொடர்ந்து இரவு சுவாமி, அம்பாள் ரிஷப வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வந்தனர். இதை திரளானோர் தரிசித்தனர். விழாவையொட்டி 3 நாட்களும் மதியம் சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.

Tags : Maharathra Chandi Yagam ,Kalakkad Sathiyaveeswarar ,
× RELATED ராஜயோகம் தரும் ராகு – கேது