×

மயிலம் அருகே ஏரி கிணற்றின் சுற்றுச்சுவர் இடிந்து சேதம்- குடிநீர் பற்றாக்குறையால் மக்கள் அவதி

திண்டிவனம் : மயிலம் அருகே ஏரி பகுதியில் உள்ள குடிநீர் கிணற்றின் சுற்றுச்சுவர் இடிந்து சேதமடைந்துள்ளதால் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.திண்டிவனம் அடுத்த மயிலம் அருகே உள்ள நாரேரிக்குப்பம் கிராமத்தில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தில் பொதுமக்களின் குடிநீர் பயன்பாட்டிற்காக கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ஏரியில் குடிநீர் கிணறு தோண்டப்பட்டது. தற்போது வரை ஏரியில் உள்ள நீர், கிணற்றை மூழ்கடித்து அசுத்தமான தண்ணீர் இருப்பதால் பொதுமக்கள் பயன்படுத்த முடியாத சூழ்நிலை உள்ளது. மேலும் ஏரியில் உள்ள கிணற்றின் சுற்றுச்சுவர் இடிந்து கிணற்றில் விழுந்துள்ளது. இதனால் ஏரியில் உள்ள கிணற்றின் சுற்றுச்சுவரை சரி செய்து, பொதுமக்களின் பயன்பாட்டுக்கு சுத்தமான குடிநீர் வழங்க வேண்டும். இதுமட்டுமின்றி போதிய பராமரிப்பு இன்றி குடிநீர் கிணறு ஏரியில் இருப்பதால் சுத்தமான குடிநீரை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத சூழ்நிலையும் இருந்து வருகிறது. ஆகையால் வேறு இடத்தில் கூடுதலாக குடிநீர் கிணறு அமைத்து தரவேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்….

The post மயிலம் அருகே ஏரி கிணற்றின் சுற்றுச்சுவர் இடிந்து சேதம்- குடிநீர் பற்றாக்குறையால் மக்கள் அவதி appeared first on Dinakaran.

Tags : Mylam ,Dindivanam ,Dinakaran ,
× RELATED மின் கசிவால் சவுக்கு தோப்பு எரிந்து சேதம்