×

இமாச்சலப்பிரதேசத்தில் அந்தரத்தில் பழுதாகி நின்ற ரோப் காரில் இருந்து 2 பேர் பத்திரமாக மீட்பு: எஞ்சியவர்களை மீட்கும் பணி தீவிரம்..!!

இமாச்சலப்பிரதேசம்: இமாச்சலப்பிரதேசத்தில் அந்தரத்தில் பழுதாகி நின்ற ரோப் காரில் சிக்கி இருந்த 11 பேரில் 2 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். கடந்த ஒன்றரை மணி நேரமாக ரோப் கார் அந்தரத்தில் தொங்குவதால் 9 சுற்றுலாப் பயணிகளும் பயத்துடன் உள்ளனர். சோலார் மாவட்டத்தில் பர்வானூ என்ற இடத்தில் 11 பேருடன் சென்ற ரோப் கார் தொழில்நுட்ப காரணத்தால் அந்தரத்தில் பழுதாகி நடுவானில் நின்றது. இதில் 2 முதியவர்கள் உட்பட 4 பெண்களும் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தனியாருக்கு சொந்தமான ரெசார்ட் ஒன்றில் உள்ள ரோப் காரில் சுற்றுலாப் பயணிகள் சென்றபோது விபத்து நேரிட்டது. ரோப் கார் பழுதாகி அந்தரத்தில் தொங்கும் இடத்துக்கு தேசிய பேரிடர் மீட்பு குழு விரைந்துள்ளனர். தற்போது 2 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். அந்தரத்தில் பழுதாகி தொங்கிக் கொண்டிருக்கும் ரோப் கார் பெட்டியில் சிக்கியுள்ள 9 பேரை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தொடர்ந்து, சம்பவம் நடந்த இடத்திற்கு மீட்பு பணிகளை பார்வையிட ஹிமாச்சல முதல்வர் ஜெய்ராம் தாகூர் சென்றுள்ளார். கடந்த ஏப்ரலில் ஜார்க்கண்டில் ரோப் கார் விபத்தில் 3 பேர் பலியாகினர். 40க்கும் மேற்பட்டோர் பத்திரமாக மீட்கப்பட்டனர் என்பது நினைவுகூரத்தக்கது….

The post இமாச்சலப்பிரதேசத்தில் அந்தரத்தில் பழுதாகி நின்ற ரோப் காரில் இருந்து 2 பேர் பத்திரமாக மீட்பு: எஞ்சியவர்களை மீட்கும் பணி தீவிரம்..!! appeared first on Dinakaran.

Tags : Himachal Pradesh ,Dinakaran ,
× RELATED ஹிமாச்சல பிரதேசம் மண்டி தொகுதியில் கங்கனா ரானாவத் வேட்பு மனு தாக்கல்