புத்தாண்டு நாளில் நீங்காத செல்வத்தை அள்ளித் தரும் குபேரன்

வாழப்பிறந்தவனுக்கு வடக்கு என்பது பழமொழி. குபேரன் இருக்கும் திசையும் வடக்குதான். கோடீஸ்வரர் ஆக வேண்டும் என்பது அனைவருக்குமே ஆசைதான். எனவேதானே கோவிலுக்கு சென்று கடவுளை வணங்கும் போது என்னை குபேரனாக மாற்று என்று வணங்குகின்றனர். குபேரன் நீங்காத செல்வத்தை அள்ளித் தருபவர். ஆனால் செல்வத்துக்கு கடவுள் மகாலட்சுமி. செல்வத்தை பக்தர்களுக்கு முறையாக பகிர்ந்து அளிக்க அவர் பணித்தார். எனவே தான் குபேரன் லட்சுமி குபேரன் என்று அழைக்கப்படுகிறார். வற்றாத செல்வ வரம் தரும் அஷ்டதிக் பாலகர்களில், குபேரனும் ஒருவர். ஒருமுறை தன்னுடைய சகல நிதிகளையும் இழந்து கஷ்டப்பட்டபோது, அவன் ஈசனிடம் வேண்டி நின்றான். ஈசன் அவனுக்காக இரங்கி சகல செல்வ வளங்களையும் அளித்தார்.

அப்படி ஈசனை குபேரன் பூஜித்த, தரிசித்த கோயில்களுக்கு நாம் சென்று வரும்போது, நமக்கும் வறுமை தீர்ந்து செல்வம் பெருகுகிறது. அப்படி ஈசனை குபேரன் பூஜித்த, தரிசித்த கோயில்களுக்கு நாம் சென்று வரும்போது, நமக்கும் வறுமை தீர்ந்து செல்வம் பெருகுகிறது. குபேரனின் விமானம் எங்கு பறந்து சென்றாலும் அந்த விமானம் தங்கம், முத்து ஆகியவற்றை சிந்திக் கொண்டே செல்லும். குபேரனை ராவணன் இலங்கையில் இருந்து வெளியேற்றியதைத் தொடர்ந்தே அவன் பல சோதனைகளைச் சந்திக்க நேர்ந்தது என்றும் புராண கதைகள் கூறுகின்றன.

குபேரன் வறுமையில் தள்ளப்படுவதற்கும், அதிலிருந்து மீண்டு வருவதற்கும் இடைப்பட்ட நேரத்தில் மிகத் தீவிரமாக ஈசனை நோக்கியோ அல்லது மகாவிஷ்ணுவை நோக்கியோ தவமிருந்து பூஜிக்கப்பட்ட லிங்கங்களோ, மூர்த்தங்களோ பின்னாளில் கோயிலாக மாறியிருக்கின்றன. குபேரன் எந்த நோக்கத்திற்காக தன்னுடைய தபோ பலத்தை, தவச் சக்தியை வளர்த்தானோ அந்த சக்தியும் அதே நோக்கத்தோடேயே அங்கும் செயல்படும். நான் என்ன வேண்டிக் கொண்டேனோ அதை இத்தலத்திற்கு வரும் பக்தர்களுக்கும் கொடு என்றுதான் ஈசனிடம் கோரிக்கை வைக்கிறான். எனவே, அவனால் பூஜிக்கப்பட்ட தலங்களுக்கு சென்று வழிபட செல்வ வளம் பெருகும்.

Related Stories:

>