×

அமெரிக்கா உணவகத்தில் துப்பாக்கி சூட்டில் 4 பேர் பலி

டெனிஸ்: அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் பள்ளி ஒன்றில் கடந்த சில வாரங்களுக்கு முன் 18 வயது நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 19 குழந்தைகள் உட்பட 21 பேர் கொல்லப்பட்டனர். இந்நிலையில், மெக்சிகோ நாட்டில் உள்ள உணவகத்தில் திடீரென மர்ம நபர்கள் இரண்டு பேரால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் கொல்லப்பட்டனர். டெனிஸ் பகுதியில் உள்ள உணவகத்தில் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த போது, அடையாளம் தெரியாத மர்ம நபர்கள், திடீரென துப்பாக்கியால் சரமாரியாக தாக்குதலில் ஈடுபட்டனர். அப்போது உணவகத்தில் இருந்த 5 பேர் மீது குண்டுகள் தாக்கியது. இதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியான நிலையில், காயமடைந்த ஒருவர் மட்டும் மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம நபர்கள் யார்? என்பது குறித்து விசாரிக்கப்பட்டு வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது. …

The post அமெரிக்கா உணவகத்தில் துப்பாக்கி சூட்டில் 4 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : USA ,DENIS ,Texas ,United States ,USA Restaurant ,Dinakaran ,
× RELATED அமெரிக்காவில் பிரபலமாகி வரும் பன்றிக்குட்டி யோகா..!!