×

நண்பனின் மனைவி குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டி பாலியல் பலாத்காரம்: வடமாநில வாலிபர் கைது : மைனர் திருமணத்தால் கணவனும் சிக்கினார்

சென்னை: குரோம்பேட்டை பகுதியில் நண்பனின் மனைவி குளிப்பதை செல்போனில் வீடியோ எடுத்து, அதை காட்டி மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த வடமாநில வாலிபரை போலீசார் கைது செய்தனர். மேலும் மைனர் பெண்ணை திருமணம் செய்ததால் கணவனும் சிக்கினார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.மேற்குவங்க மாநிலம் பீர்பூம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் தர்போக் உசேன் (28). இவரது நண்பர் காலித் ஹசன் (24). இருவரும் குரோம்பேட்டை பகுதியில் தங்கி கட்டிட வேலை செய்து வருகின்றனர். தர்போக் உசேன் மேற்குவங்கம் பிர்பூம் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியை திருமணம் செய்துகொண்டு குரோம்பேட்டை அழைத்து வந்து குடித்தனம் நடத்தியுள்ளார். ஏற்கனவே திருமணமான தர்போக் உசேன் இரண்டாவதாக அந்த சிறுமியை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டு நண்பர் காலித் ஹசன் அறை அருகே வீடு எடுத்து கணவன், மனைவியாக வாழ்ந்துள்ளனர்.இந்நிலையில், நண்பனின் மனைவி மீது காலித் ஹசன் ஈர்ப்புக்கொண்டார். இதனால் ேநற்று முன்தினம்  சிறுமி குளிப்பதை தான் மறைத்து வைத்திருந்த செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். பின்னர் தனிமையில் இருந்த சிறுமியிடம் அந்த வீடியோவை காட்டி அவரை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து சிறுமி தாம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் காலித் ஹசனை கைது செய்தனர். மேலும் மைனர் பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்த தர்போக் உசேனையும் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து போலீசார் சிறுமியை காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது….

The post நண்பனின் மனைவி குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டி பாலியல் பலாத்காரம்: வடமாநில வாலிபர் கைது : மைனர் திருமணத்தால் கணவனும் சிக்கினார் appeared first on Dinakaran.

Tags : North State ,Chennai ,Crompettai ,
× RELATED குழந்தையை கடத்த வந்ததாக நினைத்து...