×

முத்தியால்பேட்டை ஊராட்சியில் ரூ. 9 லட்சம் மதிப்பீட்டில் புதிய சிமெண்ட் சாலை: எம்எல்ஏ சுந்தர் துவக்கி வைத்தார்

வாலாஜாபாத்: முத்தியால்பேட்டை ஊராட்சியில் ரூ. 9 லட்சம் மதிப்பீட்டில் புதிய சிமெணட் சாலை அமைக்கும் பணியினை எம்எல்ஏ சுந்தர் நேற்று துவக்கி வைத்தார். வாலாஜாபாத் ஒன்றியம் முத்தியால்பேட்டை ஊராட்சியில், 1500க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த ஊராட்சியில் பிரதான சாலையாக விளங்குவது கவரை தெரு. இங்கு கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு சிமெண்ட் சாலை போடப்பட்டது. தற்போது, சிமெண்ட் சாலை ஆங்காங்கே சிதலமடைந்து வாகன போக்குவரத்திற்கு லாயக்கற்றதாக மாறியது. இதனை, புதிய சிமெண்ட் சாலையாக அமைத்து தர இப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். இதனையடுத்து, ஒன்றிய பொது நிதியிலிருந்து ரூ. 9.20 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து சிமெண்ட் சாலை அமைக்கும் பணியினை சுந்தர் எம்எல்ஏ பூமி பூஜை செய்து நேற்று துவக்கி வைத்தார்.இதனை தொடர்ந்து, இந்த சாலை எத்தனை மீட்டர், எவ்வளவு அகலம், எப்பொழுது பணி நிறைவடையும் எனவும் ஒன்றிய பொறியாளர்களிடம் கேட்டறிந்தார். இந்நிகழ்ச்சியில், ஒன்றிய குழு தலைவர் தேவேந்திரன், துணை தலைவர் சேகர், மாவட்ட கவுன்சிலர் பொற்கொடிசெல்வராஜ், ஒன்றிய கவுன்சிலர் பிரேமாரஞ்சித்குமார், ஊராட்சி மன்ற தலைவர் அன்பழகன், துணை தலைவர் பானுப்பிரியாமுனீர்கான், ஒன்றிய பொறியாளர் கலைவாணன், பணி மேற்பார்வையாளர் மாரி, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள் ஜெயராமன், ரஞ்சித்குமார் மற்றும் முத்தியால்பேட்டை திமுக நிர்வாகிகள் ரமேஷ், கோபாலகிருஷ்ணன், பழனி, முருகன், பாபு உட்பட ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்….

The post முத்தியால்பேட்டை ஊராட்சியில் ரூ. 9 லட்சம் மதிப்பீட்டில் புதிய சிமெண்ட் சாலை: எம்எல்ஏ சுந்தர் துவக்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Muthyalbapettu ,Puravasi ,MLA Sunder ,Valajabad ,Muthiyalbhettu Urachachi ,MLA Sunderar ,Cimenat Road ,Muthialpate ,Dinakaran ,
× RELATED சட்ட மன்ற தோர்தலில் 13 முறை வெற்றி...