×

செஸ் ஒலிம்பியாட் போட்டி எதிரொலியாக திருவிடந்தையில் ஹெலிகாப்டர் இறங்குதளம் சப் -கலெக்டர் ஆய்வு

மாமல்லபுரம்: சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி எதிரொலியாக திருவிடந்தையில் ஹெலிகாப்டர் இறங்கு தளத்தை செங்கல்பட்டு சப் – கலெக்டர் ஆய்வு செய்தார். மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தையில் சுமார் ரூ800 கோடி செலவில் கடந்த 2018ம் ஆண்டு ஏப்ரல் 11ம் தேதி முதல் 14ம் தேதி வரை ராணுவ தளவாட கண்காட்சி நடந்தது. இதற்காக, திருவிடந்தை பகுதியில் 3 லட்சம் சதுர அடியில் அரங்கம் அமைக்கப்பட்டது. இதில், அமெரிக்கா, ரஷ்யா, கனடா உள்ளிட்ட 47 நாடுகளில் இருந்து அதி நவீன ராணுவ தளவாடங்கள், போர்க் கருவிகள் காட்சிப்படுத்தப்பட்டன. முதல் நாள், துவக்க நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று ராணுவ கண்காட்சியை துவக்கி வைத்து போர்க் கருவிகளை பார்வையிட்டார். முன்னதாக, பிரதமர் மோடி வருகையொட்டி ஹெலிகாப்டர் இறங்கு தளம் அமைக்கப்பட்டது.இந்நிலையில், மாமல்லபுரம் தனியார் ரிசார்ட்டில் 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் ஜூலை 27ம் தேதி முதல், ஆகஸ்ட் 10ம் தேதி வரை நடக்க உள்ளது. செஸ் ஒலிம்பியாட், போட்டிக்காக பல்வேறு நாடுகளில் இருந்து விஐபிகள் வருகை தர உள்ளனர். இதற்காக, திருவிடந்தையில் உள்ள ஹெலிகாப்டர் இறங்கு தளம் சரியாக உள்ளதா, வேறு ஏதேனும் அடிப்படை வசதிகள் மேற்கொள்ள வேண்டுமா என நேற்று மதியம் செங்கல்பட்டு  சப் – கலெக்டர் சஜ்ஜீவனா ஆய்வு நடத்தினார். இதேபோல், புதிதாக ஹெலிகாப்டர் இறங்கு தளம் அமைக்க பூஞ்சேரி தனியார் அடுக்குமாடி குடியிருப்புக்கு அருகே  உள்ள இடத்தையும் ஆய்வு செய்தார். மொத்தம், 3 இடங்களில் ஹெலிகாப்டர் இறங்கு தளம் அமைய உள்ளதாக வருவாய் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. செஸ், ஒலிம்பியாட் போட்டி துவக்க நாளில் பிரதமர் மோடி பங்கேற்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த ஆய்வின்போது, மாமல்லபுரம் டிஎஸ்பி ஜகதிஸ்வரன், மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன், மாமல்லபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் கணேஷ், வருவாய் ஆய்வாளர் ரகு, விஏஓ நரேஷ்குமார் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்…

The post செஸ் ஒலிம்பியாட் போட்டி எதிரொலியாக திருவிடந்தையில் ஹெலிகாப்டர் இறங்குதளம் சப் -கலெக்டர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Thiruvidanthai ,Chess Olympiad ,Mamallapuram ,Chengalpattu ,International Chess Olympiad ,
× RELATED மாமல்லபுரம் இசிஆரில் விபத்தை குறைக்க...