×

அஜித்துக்கு ஜோடியாகிறார் கீர்த்தி சுரேஷ்?

ஐதராபாத்: குட் பேட் அக்லி படக்குழு ரஷ்யா புறப்பட்டு செல்கிறது. அஜித் மூன்று வேடங்களில் நடிக்கும் படம் குட் பேட் அக்லி. இந்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார். தேவி பிரசாத் இசையமைக்கிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கிறது. ஐதராபாத்தில் கடந்த 10ம் தேதி படப்பிடிப்பு தொடங்கியது. முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்த கையோடு படக்குழு இரண்டாம் கட்ட படப்பிடிப்பை தொடங்க இருக்கிறார்கள். இங்கு படப்பிடிப்பு முடிந்ததும் அடுத்து ரஷ்யா கிளம்பி செல்ல இருக்கிறது படக்குழு.

முதல்கட்ட படப்பிடிப்பி அஜித்தின் ஆக்‌ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டதைத் தொடர்ந்து ரஷ்யாவிலும் ஆக்‌ஷன் காட்சிகள் படமாக்கப்பட இருக்கின்றன. அடுத்த ஆண்டு பொங்கலுக்கு இப்படத்தை வெளியிடுவதாக முன்னதாக அறிவிப்பு வெளியாகிவிட்டதால் படப்பிடிப்பை வேகமாக நடத்தி வருகிறார்கள். ரஷ்யாவில் படப்பிடிப்பு முடிந்த பிறகே ஹீரோயின் சம்பந்தப்பட்ட காட்சிகளை எடுக்க உள்ளனர். இதனால் ஹீரோயின் இன்னும் தேர்வாகவில்லை. சில நடிகைகளிடம் பேசி வருவதாக கூறப்படுகிறது. அதில் கீர்த்தி சுரேஷின் பெயரும் இருப்பதாக சொல்லப்படுகிறது.

 

The post அஜித்துக்கு ஜோடியாகிறார் கீர்த்தி சுரேஷ்? appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Keerthy Suresh ,Ajith ,Hyderabad ,Russia ,Adhik Ravichandran ,Devi Prasad ,Maitri Movie Makers ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED பாலிவுட் போகிறார் ஸ்ரீலீலா