×

உள்துறை, மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் உள்பட 51 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றம்: தமிழக அரசு உத்தரவு

சென்னை: உள்துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, நெடுஞ்சாலை துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த செயலாளர்கள், ஆணையர்கள் உள்பட 51 ஐஏஎஸ் அதிகாரிகள்  பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என்று தமிழக அரசு வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசின் தலைமை செயலாளர் இறையன்பு நேற்று வெளியிட்ட அறிவிப்பு: வணிகவரித்துறை ஆணையராக இருந்த பணீந்திர ரெட்டி, உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை கூடுதல் முதன்மை செயலாளராக நியமிக்கப்படுகிறார். அங்கிருந்த கூடுதல் செயலாளர் எஸ்.கே.பிரபாகர், வருவாய் நிர்வாக ஆணையராகவும், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை கூடுதல் செயலாளராக இருந்த நசிமுதீன், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை கூடுதல் செயலாளராக நியமிக்கப்படுகிறார். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் செயலாளராக நியமிக்கப்படுகிறார். சென்னை மெட்ரோ ரயில் நிர்வாக மேலாண்மை இயக்குநர் பிரதீப் யாதவ், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை செயலாளராக நியமிக்கப்படுகிறார். நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை செயலாளர் தீரஜ் குமார், வணிகவரித்துறை ஆணையராகவும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சிறப்பு பணி அலுவலர் பி.செந்தில்குமார் இத்துறையின் முதன்மை செயலாளராக நியமிக்கப்படுகிறார். விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலாளர் அனந்தகுமார், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளராகவும், தேசிய சுகாதார திட்டப்பணியின் திட்ட இயக்குநர் தாரேஷ் அகமது ஊரக வளர்ச்சித்துறையின் ஆணையராகவும், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை ஆணையர் ஜெயகாந்தன், புவியியல் மற்றும் கணிமவளத்துறை ஆணையராகவும், புவியியல் மற்றும் கணிமவளத்துறை இயக்குனராக இருந்த நிர்மல் ராஜ் போக்குவரத்துத்துறை ஆணையராக நியமிக்கப்படுகிறார். வெளிநாடு வாழ் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வு துறை ஆணையர் ஜெசிந்தா லாசரஸ், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஆணையராகவும், தென்காசி மாவட்ட கலெக்டர் கோபால சுந்தர ராஜ், வணிகவரித்துறை இணை ஆணையராகவும், உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை இணை நிர்வாக இயக்குநர் சங்கீதா, வணிகவரித்துறை இணை ஆணையர்(நிர்வாகம்), திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு, கோவை வணிகவரித்துறை இணை ஆணையராகவும், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆணையர் மதிவாணன், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை ஆணையராகவும், மகளிர் மேம்பாட்டுத்துறை நிர்வாக இயக்குநர் மரியம் பல்லவி பல்தேவ், தொழில்துறை கூடுதல் செயலாளராக நியமிக்கப்படுகிறார். மின்னாளுமை துறை இயக்குநர் விஜயேந்திர பாண்டியன், கருவூலம் மற்றும் கணக்குகள் துறை ஆணையராகவும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளர் லல்வெனா, உணவு பாதுகாப்புத்துறையின் ஆணையராகவும், ராமநாதபுரம் முன்னாள் ஆட்சியர் சந்திரகலா, தொழில்முனைவு மேம்பாட்டு நிறுவன இயக்குநராக நியமிக்கப்படுகின்றனர். நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை இணை செயலாளர் ஜான் லூயிஸ், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை இணை ஆணையராகவும், அருங்காட்சியகங்கள் இயக்குநர் ராமன், பேரிடர் மேலாண்மை துறை இயக்குநராக நியமிக்கபடுகிறார். தாட்கோ நிர்வாக இயக்குநர் விவேகானந்தன், மாநில தேர்தல் ஆணைய செயலாளராகவும், சென்னை முன்னாள் கலெக்டர் விஜயா ராணி, சேலம் பட்டுவளர்ப்பு துறை இயக்குநராகவும், பால்வளத்துறை ஆணையர் பிரகாஷ், ஆவண காப்பகங்கள் மற்றும் வரலாற்று ஆய்வுகள் துறை ஆணையராகவும், ஊரக வளர்ச்சித்துறை சிறப்பு செயலாளர் பிங்கி ஜோயல் பொருளாதாரம் மற்றும் புள்ளியல் துறை ஆணையராகவும், இத்துறையின் ஆணையராக இருந்த கருணாகரன் ஊரக வளர்ச்சித்துறை சிறப்பு செயலாளராக நியமிக்கப்படுகிறார். கருவூலத்துறை ஆணையராக இருந்த வெங்கடேஷ், போக்குவரத்து துறை சிறப்பு செயலாளராகவும், வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை இனை ஆணையர் சீதா லட்சுமி, சமூகநலம் மற்றும் மகளிர் அதிகாரமளித்தல் துறையின் இணை செயலாளராகவும், ஊரக வளர்ச்சித்துறை இயக்குநர் பிரவீன் பி.நாயர், மின்னாளுமை துறை இயக்குநராகவும், தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் நிர்வாக இயக்குநர் மணிகண்டன், பள்ளிக்கல்வித்துறை இணை செயலாளராகவும், ஆவண காப்பகம் மற்றும் வரலாற்று ஆய்வுகள் ஆணையர் ஹர் சகாய் மீனா, திட்டம் மற்றும் வளர்ச்சித்துறை சிறப்பு செயலாளராக நியமிக்கப்படுகின்றனர். சென்னை மாநகராட்சி (சுகாதாரம்) இணை ஆணையர் நர்னவரே மணீஷ் சங்கரராவ், ஊரக வளர்ச்சித்துறை கூடுதல் இயக்குநராகவும், தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரிய இணை நிர்வாக இயக்குநர் பிரதீப் குமார், திருச்சி கலெக்டராக நியமிக்கப்படுகின்றனர். சேலம் பட்டு வளர்ப்பு இயக்குனர் சாந்தி தர்மபுரி கலெக்டராகவும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இயக்குனர் ஜானி டாம் வர்க்கீஸ் ராமநாதபுரம் மாவட்ட கலெக்டராகவும், சென்னை குடிநீர் விநியோகம் மற்றும் கழிவு நீர் அகற்றும் வாரிய செயல் இயக்குனர் ஆகாஷ் தென்காசி மாவட்ட கலெக்டராகவும், தமிழ்நாடு நகர்ப்புற உட்கட்டமைப்பு மற்றும் நிதிகள் சேவைகள் நிறுவன மேலாண்மை இயக்குனர் சாய்குமார் தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகிதங்கள் நிறுவன மேலாண்மை இயக்குனராகவும், தொழிலாளர் நலத்துறை செயலாளர் கிர்லோஷ்குமார் சென்னை குடிநீர் விநியோகம் மற்றும் கழிவுநீர் அகற்றும் வாரிய மேலாண்மை இயக்குனராகவும், தர்மபுரி கலெக்டர் திவ்ய தர்ஷினி தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவன மேலாண்மை இயக்குனராகவும், முதல்வரின் முகவரி சிறப்பு அதிகாரி ஷில்பா பிரபாகர் சதீஷ் தமிழ்நாடு தேசிய சுகாதார பணி இயக்குநராக நியமிக்கப்படுகிறார். மேலும் அவர் முதல்வரின் முகவரி சிறப்பு அதிகாரியாக கூடுதல் பொறுப்பை வகிப்பார். தொழில்துறை சிறப்பு செயலாளர் ஜெயஸ்ரீ முரளிதரன் தமிழ்நாடு தொழில் மேம்பாட்டு கழக மேலாண்மை இயக்குனராகவும், தமிழ்நாடு தேர்தல் ஆணைய செயலாளர் சுந்தரவல்லி சிப்காட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனராகவும், சிப்காட் மேலாண்மை இயக்குனர் ஆனந்த், சிறு தொழில் மேம்பாட்டு கழகம் (சிட்கோ) மேலாண்மை இயக்குனராகவும் நியமிக்கப்படுகிறார்.சிட்கோ மேலாண்மை இயக்குனர் கஜலட்சுமி தமிழ்நாடு பாட நூல் கழக மேலாண்மை இயக்குனராகவும், பேரிடர் மேலாண்மை துறை இயக்குனர் கந்தசாமி தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மேம்பாட்டு கழக மேலாண்மை இயக்குனராகவும், போக்குவரத்து ஆணையராக இருந்த நடராஜன், தமிழ்நாடு கடல்சார் வாரியத்தின் முதன்மை செயல் அதிகாரியாகவும், சென்னை குடிநீர் விநியோகம் மற்றும் கழிவு நீர் அகற்றும் வாரிய மேலாண்மை இயக்குனர் விஜயராஜ் குமார், தமிழ்நாடு பவர் பைனான்ஸ் மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாட்டு கழக தலைவராகவும், ராமநாதபுரம் கலெக்டர் சங்கர் லால் குமாவத், பெருநகர சென்னை மாநகராட்சி இணை ஆணையராகவும் (சுகாதாரம்), வணிகவரித்துறை இணை ஆணையர் (நிர்வாகம்) கற்பகம், தமிழ்நாடு உணவு விநியோக கழக மேலாண்மை இயக்குனராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், வருவாய்  நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை ஆணையர் சித்திக், சென்னை மெட்ரோ  ரயில் நிறுவன நிர்வாக இயக்குநராக நியமிக்கப்படுகிறார். இவ்வாறு தமிழக அரசின் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.* இதுவரை மருத்துவம் மற்றும் மக்கள்  நல்வாழ்வுத்துறை செயலாளராக இருந்த ராதாகிருஷ்ணன், கூட்டுறவு, உணவு மற்றும்  நுகர்வோர் பாதுகாப்புத்துறை செயலாளராக மாற்றப்பட்டுள்ளார்.* உள்துறை செயலாளராக இருந்த எஸ்.கே.பிரபாகர், வருவாய் நிர்வாக ஆணையராக மாற்றப்பட்டிருக்கிறார். * வணிகவரித்துறை ஆணையராக இருந்த பணீந்திர ரெட்டி உள்துறை செயலாளராக மாற்றப்பட்டுள்ளார். …

The post உள்துறை, மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் உள்பட 51 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றம்: தமிழக அரசு உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Department of Public Welfare ,Tamil Nadu Govt. ,Chennai ,Home ,Medical and Public Welfare Department ,Highway Department ,Public Welfare Department ,Tamil Nadu government ,Dinakaran ,
× RELATED சதுப்பு நிலங்களை அடையாளம் காணும்...