×

மீன்பிடி தடைகாலம் நாளை நள்ளிரவுடன் நிறைவு கடலிறங்கக் காத்திருக்கும் விசைப்படகுகள்: துறைமுகங்களில் சுறுசுறுப்பு

ராமேஸ்வரம்: தமிழக கடலில் மீன்பிடி தடைக்காலம் நாளை நள்ளிரவுடன் முடிவடைகிறது. 2 மாத இடைவெளிக்குப் பின் கடலுக்கு செல்ல விசைப்படகு மீனவர்கள் தயார் நிலையில் உள்ளனர். தமிழக கடலில் மீன்களின் இனப்பெருக்கத்திற்காகவும், இறால் மீன் வளர்ச்சிக்காகவும் ஆண்டுதோறும் ஏப். 15ம் தேதி துவங்கி 60 நாட்கள் விசைப்படகுகள் மீன்பிடிக்க தடை அமல்படுத்தப்படுகிறது. இந்த ஆண்டு ஏப். 14ம் தேதி நள்ளிரவு 12 மணி முதல் இத்தடை தமிழகத்தில் அமலுக்கு வந்தது. சென்னை முதல் கன்னியாகுமரி வரையுள்ள வங்கக்கடல், பாக் ஜலசந்தி, மன்னார் வளைகுடா கடல் பகுதிகளில் கடந்த 2 மாதமாக 7,000க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் விசைப்படகு மீனவர்கள், மீன்பிடி தொழில் சார்ந்த பணியாளர்கள், கூலி தொழிலாளர்கள் என 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தொழில் இழந்தனர். பல நூறு கோடி ரூபாய் அளவிற்கு மீன் வர்த்தகம் பாதிக்கப்பட்டது. கரையேற்றப்பட்ட விசைப்படகுகளும் சீரமைப்பு பணிகள் முடிந்து மீண்டும் கடலில் இறக்கப்பட்டு மீன்பிடிக்க செல்வதற்கு தயாராகவுள்ளன. இந்நிலையில் 2 மாத கால மீன்பிடி தடைக்காலம் நாளை (ஜூன் 14) நள்ளிரவு 12 மணியுடன் முடிவடைகிறது. ஜூன் 15ம் தேதி முதல் பாக் ஜலசந்தி, வங்கக்கடல் பகுதியில் விசைப்படகு மீனவர்கள் வழக்கம்போல் மீன்பிடிக்க செல்லவுள்ளனர். அடுத்த நாள் ஜூன் 16ம் தேதி முதல் மன்னார் வளைகுடா கடலில் விசைப்படகு மீனவர்கள் மீன் பிடிக்க செல்வார்கள். சுமார் 2 மாத கால மீன்பிடி தடைகாலம் முடிந்து மீண்டும் கடலில் மீன்பிடிக்க செல்லவுள்ளதால் தமிழகம் முழுவதும் விசைப்படகு மீனவர்கள் தங்களது படகுகளை தயார் செய்யும் பணியில் சுறுசுறுப்பாக ஈடுபட்டுள்ளனர். மீன்பிடி துறைமுகங்களில் நிறுத்தப்பட்டுள்ள விசைப்படகுகளில் வலை உள்ளிட்ட மீன்பிடி சாதனங்களை ஏற்றும் பணியில் மீனவர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஜூன் 15ம் தேதி அதிகாலை மீன்வளத்துறை அதிகாரிகளால் விசைப்படகுகளுக்கு மீன்பிடி டோக்கன் வழங்கப்பட்டு மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவுள்ளனர்….

The post மீன்பிடி தடைகாலம் நாளை நள்ளிரவுடன் நிறைவு கடலிறங்கக் காத்திருக்கும் விசைப்படகுகள்: துறைமுகங்களில் சுறுசுறுப்பு appeared first on Dinakaran.

Tags : Rameswaram ,Tamil Nadu ,
× RELATED ராமேஸ்வரம் அடுத்துள்ள குந்து கால் கடலில் குளிக்கச் சென்ற சிறுவன் மாயம்!